- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்கு வயசாகிடுச்சு.. அவரால் பெர்த்தில் சாதிக்க முடியாது.. ஆஸி வெல்லும்.. ஜாம்பவான் கோச் பேட்டி

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2018-19, 2020-21 ஆகிய 2 தொடர்களையும் இந்தியா வென்றது. எனவே இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் இந்தியா தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் போன்ற வீரர்களுக்கு வயதாகி விட்டதாக 2003, 2007 உலகக் கோப்பைகளை வென்ற முன்னாள் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜான் புச்சனன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த இங்கிலாந்து தொடரில் 712 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் அதுவும் சவாலான பெர்த் மைதானத்தில் அசத்துவது கடினம் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

வயதான இந்திய அணி:

அத்துடன் ஒன்றுக்கும் மேற்பட்ட பயிற்சி போட்டிகளில் விளையாடி முழுமையாக தயாராகாமல் களமிறங்க உள்ள இந்தியாவுக்கு எதிராக இம்முறை ஆஸ்திரேலியா வெல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் வயதை பார்க்கிறேன். இந்திய அணியில் கொஞ்சம் வயதான வீரர்கள் உள்ளனர். குறிப்பாக ரோஹித் சர்மாவுக்கு 37, விராட் கோலிக்கு 35, ஆஸ்திரேலியாவுக்கு வரும் போது அஸ்வினுக்கு 37 வயதாகும்”

“ஆஸ்திரேலிய அணியிலும் சில வீரர்கள் மட்டுமே 30 வயதிற்குள் உள்ளனர். இத்தொடரின் வெற்றி இரு அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடையேயான போட்டியாக இருக்கும். அதே போல இரு அணிகளின் டாப் பேட்ஸ்மேன்கள் எப்படி வேகம், பவுன்ஸ், ஸ்விங் ஆகியவற்றை சமாளிக்கிறார்கள் என்பதை பொறுத்தமையும். நான் எப்போதும் கணிப்புகளை சொல்ல மாட்டேன். எனவே தற்சமயத்தில் அத்தொடரில் ஆஸ்திரேலியா வெல்லும் அணியாக இருப்பதாக நினைக்கிறேன்”

- Advertisement -

சவாலான ஆஸ்திரேலியா:

“குறிப்பாக தற்போதைய உலக அணிகளை பார்க்கும் போது இதர நாடுகளில் வெல்வது கடினமாக உள்ளது. இப்போதெல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணி முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் 2 – 3 பயிற்சி போட்டிகளில் விளையாடி அங்குள்ள சூழ்நிலைகளுக்கு தங்களை அட்ஜஸ்ட் செய்து கொள்வதில்லை. ஏனெனில் இப்போதெல்லாம் யாரும் சுற்றுப்பயணம் பெரிதாக இருப்பதை விரும்புவதில்லை”

இதையும் படிங்க: ரிச்சர்ட்ஸ் கை தட்டலுக்காகவே ரோஹித் சர்மா தெறிக்க விட்டாரு.. பின்னணியை பகிர்ந்த பத்திரிகையாளர்

“ஜெயஸ்வால் பற்றி நிறைய பேச்சுக்கள் காணப்படுகிறது. அவர் சுவாரசியம் நிறைந்த இளம் வீரர். இருப்பினும் இதுவரை அவர் ஆஸ்திரேலியாவில் விளையாடியதில்லை. அல்லது குறைந்தபட்சம் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் பெர்த் பிட்ச்சில் விளையாடியதில்லை. எனவே அது போன்ற சூழ்நிலையில் அவர் எப்படி தன்னை அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார் என்பதில் இந்தியாவின் முழுமையான செயல்பாடு வெளிப்படலாம்” என்று கூறினார்.

- Advertisement -