ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்களுக்கு சாம்பியன் பட்டம் பெற்றது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஜூன் மாதம் நடைபெற்ற அத்தொடரில் ரோகித் சர்மா தலைமையில் அசத்திய இந்தியா தோல்வியை பெறாமல் வெற்றி பெற்றது. குறிப்பாக இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது ரசிகர்களுக்கு மறக்க முடியாததாக அமைந்தது.
அதே போல அசுரன் ஆஸ்திரேலியாவை சூப்பர் 8 சுற்றில் 24 ரன்கள் இந்தியா தோற்கடித்ததும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அப்போட்டியில் தம்முடைய சொந்த சாதனையைப் பற்றி கவலைப்படாமல் ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய கேப்டன் ரோஹித் சர்மா 92 (41) ரன்கள் விளாசி இந்தியாவை தனி ஒருவனாக வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
தெறிக்க விட்ட ரோஹித் சர்மா:
குறிப்பாக தரமான மிட்சேல் ஸ்டாக்கிற்கு எதிராக ஒரே ஓவரில் 29 ரன்களை தெறிக்க விட்ட ரோஹித் சர்மா அட்டகாசமான சாதனை படைத்தார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் விவ் ரிச்சர்ட்ஸ் சொந்த ஊரான செயின்ட் லூசியாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவருடைய பாராட்டை பெறுவதற்காகவே ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடியதாக இந்தியாவின் பிரபல மூத்த பத்திரிக்கையாளர் விமல் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் தம்முடைய ஆட்டத்தை பார்த்து ரிச்சர்ட்ஸ் கைதட்டி பாராட்டியது ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய திருப்தியை கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் விமல் குமார் தெரிவித்தது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவை தோற்கடித்தால் பின்னர் இந்தியாவை யாரும் நிறுத்த முடியாது என்பது எப்போதும் எனக்குத் தெரியும்”
ஜாம்பவானின் பாராட்டு:
“ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா தனிப்பட்ட முறையில் வேண்டுமென்றே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற வகையில் பேட்டிங் செய்தார். அது விவ் ரிச்சர்ட்ஸ் அவர்களின் சொந்த மைதானம். அப்போட்டியை நேரில் பார்த்த அவர் ஆச்சரியமடைந்ததாக சிலர் என்னிடம் சொன்னார்கள். ரிச்சர்ட்ஸ் போன்றவர் அரை மணி நேரம் உங்களது ஆட்டத்தை பார்த்து ஆச்சரியத்துடன் பாராட்டினால் உங்களுடைய வாழ்க்கை வெற்றியடைந்ததாக அர்த்தம்”
இதையும் படிங்க: இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாஹீர் கானுக்கு கிடைத்த புதிய பதவி – அவருக்கான சரியான பதவியும் அதுதான்
“ரிச்சர்ட்ஸ் பார்த்து உங்களுக்கு கைதட்டுகிறார் என்றால் அதை விட வேறு எதுவும் இருக்க முடியாது” என்று கூறினார். முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் வெளியேறினால் என்னுடைய முழு ஆதரவும் உங்களுக்கு கொடுப்பேன் என்று இந்திய அணியை பார்த்து ரிச்சர்ட்ஸ் நேரடியாகவே சொன்னார். இறுதியில் அவரது ஆதரவுடன் இந்தியாவும் வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.



