நான் வீட்டிற்கு அருகில் இருந்தாலும் வீட்டிற்கு போவதில்லை. அதற்கு காரணம் இதுதான் – டி.எஸ்.பி ஜோஹிந்தர் சர்மா பேட்டி

joginder
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக 4 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியவர் ஜோகிந்தர் ஷர்மா. ஆனால், இவர் செய்த ஒரே ஒரு சிறப்பான சம்பவத்தால் தற்போது வரை பேசப்பட்டு கொண்டிருக்கிறார். தோனி தலைமையில் 2007ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை தொடரில் இந்திய அணி வென்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் வெல்ல மிகப்பெரிய காரணமாக இருந்தவர் இந்த ஜோகிந்தேர் ஷர்மா தான். கடைசி ஓவரில் மிஸ்பா உல் ஹக் விக்கெட்டை வீழ்த்தி வெற்றி தேடித்தந்தார் ஜொஹிந்தர் சர்மா.

Joginder 1

- Advertisement -

இவர் 2017 வரை முதல் தரப் போட்டிகளில் ஆடி விட்டு தற்போது ஹரியானா மாநில காவல்துறையில் போலீஸ் டிஎஸ்பி ஆக பணியாற்றி வருகிறார். கரோனா வைரஸ் தொற்று காரணமாக காவல்துறை 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறது. அதே வேலைதான் இந்திய முன்னாள் வீரர் ஜொஹிந்தர் சர்மாவும் கொரோனா தடுப்பு பணிக்காக 21 நாள் டியூட்டி பார்த்து வருகிறார்.

இதன் காரணமாக ஹரியானா மாநில வீதிகளில் இறங்கி ஒரு மிகச்சிறந்த போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த புகைப்படத்தை கண்ட ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது புகைப்படத்தை பகிர்ந்து பாராட்டியுள்ளது. தனது பணி குறித்து சமீபத்தில் ஒரு தனியார் இணையதளத்திற்கு பேட்டி கொடுத்த ஜோகிந்தர் சர்மா கூறியதாவது :

Joginder

2017ல் கிரிக்கெட்டிள் இருந்து விலகினேன். அப்போதிலிருந்து காவல் துறையில் தீவிரமாக பணியாற்றி வருகிறேன். நான் காவல்துறை அதிகாரியாக அந்த சவால்களில் இது மிகவும் கடுமையாக உள்ளது. மக்கள் மட்டுமல்லாமல் காவலர்களும் தங்களது உயிரைக் காத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. தினமும் காலை 6 மணிக்கு என்னுடைய பணி ஆரம்பமாகும். 24 மணி நேரமும் அனைத்து விதமான வேலைகளுக்கும் நான் தயாராக இருக்க வேண்டும்.

- Advertisement -

பாதுகாப்பாக இருப்பது குறித்து மக்களிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க வேண்டும். என்னிடம் என்னை காண வரும் மக்கள் பலரும் என்னை அடையாளம் கண்டுகொண்டு செல்பி புகைப்படம் எடுக்க கேட்பர். ஆனால் இந்த பிரச்சனை எல்லாம் முடிந்த பின்னர் தான் இதற்கு அனுமதிப்பேன் என்று கடுமையாக கூறி அவர்களை அனுப்பி விடுவேன்.

Joginder 1

நான் பணி செய்யும் இடத்தில் இருந்து 110 கிலோமீட்டர் தள்ளி எனது வீடு உள்ளது. சாலையில் பயணம் செய்தால் ஒன்றரை மணி நேரத்தில் சென்றுவிடலாம். எனினும் இந்த சமயத்தில் தினமும் மக்களை சந்திப்பதால் வீட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். அப்படியே நான் வீட்டிற்குச் சென்றாலும் எனது குடும்பத்தையும் ஆபத்தில் தள்ளிவிடுவேன் என்பதால் பல வாரங்களாக நான் வீட்டிற்கு செல்லாமல் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறேன் என்று கூறியுள்ளார் ஜொஹிந்தர் சர்மா.

Advertisement