
ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. அத்தொடரில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து பஸ்பால் அணுகுமுறையில் விளையாடி ஆஸ்திரேலியாவில் கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலியா 2 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
அதனால் பெரிய பின்னடைவை சந்தித்த இங்கிலாந்து டிசம்பர் 16ஆம் தேதி துவங்கிய 3வது போட்டியில் வென்றால் மட்டுமே கோப்பையை வெல்லும் வாய்ப்பை தக்க வைக்கும் முடியும் என்ற சூழ்நிலையில் களமிறங்கியது. அடிலெய்ட் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 371 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 106, உஸ்மான் கவாஜா 82, மிட்சேல் ஸ்டார்க் 54 ரன்கள் குவித்தனர்.
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய இங்கிலாந்து மீண்டும் சுமாராக விளையாடி 286க்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 83, ஜோப்ரா ஆர்ச்சர் 51, ஹாரி ப்ரூக் 45 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ், ஸ்காட் போலண்ட் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அடுத்ததாக 85 ரன்கள் முன்னிலையுடன் விளையாடும் ஆஸ்திரேலியா 3வது நாள் முடிவில் 271/4 ரன்களை எடுத்துள்ளது. களத்தில் டிராவிஸ் ஹெட் சதமடித்து 142*, அலெக்ஸ் கேரி 52* ரன்களுடன் உள்ளனர். தற்சமயத்தில் ஆஸ்திரேலியா மொத்தம் 356 ரன்களை முன்னிலையில் இருப்பதால் இப்போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெறுவது கேள்விக் குறியாகியுள்ளது.
முன்னதாக அப்போட்டியில் 2வது 326/8 என்ற ஸ்கோருடன் ஆட்டத்தை துவங்கிய ஆஸ்திரேலியாவுக்கு மிட்சேல் ஸ்டார்க் குறுகிய இடைவேளையில் அதிரடியாக 4 பவுண்டரிகளை விளாசி அரை சதமடித்தார். அதனால் விரக்தியடைந்த இங்கிலாந்து பவுலர் ஜோப்ரா ஆர்ச்சர் தமக்குத் தகுந்த ஃபீல்டிங்கை செட்டிங் செய்யுமாறு கேட்டார். அதற்கு ஃபீல்டிங் மேலே தவறில்லை நீ கட்டுப்பாட்டுடன் பந்து வீசாததே பவுண்டரிகள் செல்ல காரணம் என்று ஸ்டோக்ஸ் பதிலளித்தார்.
இதையும் படிங்க: 4க்கு 4.. 99இல் கோட்டை விட்ட இங்கிலாந்தை நொறுக்கும் ஹெட்.. அடிலெய்டில் மாஸ் சாதனை.. ஆஸி மிரட்டல்
இது பற்றி ஸ்டோக்ஸ் சொன்னது பின்வருமாறு (ஸ்டம்ப் மைக்). “நண்பா, நீ மோசமாக பந்து வீசும் போது ஃபீல்ட் பற்றி புகார் சொல்லாதே. ஸ்டம்ப் லைனில் பந்து வீசி விட்டு என்ன நடக்கிறது என்று பார்” என்று கூறியதாக கேட்டது. அதை ஏற்காத ஆர்ச்சர் தன்னுடைய கேப்டனுடன் கோபமாக சண்டையிட்டார். அதனால் கோபமடைந்த ஸ்டோக்ஸ் பிரபல ஆங்கில கெட்ட வார்த்தையுடன் சேர்த்து “மூடிகிட்டு போடு” என்று அவரிடம் சொன்னது குறிப்பிடத்தக்கது.