ஸ்மித் சரிந்து கீழே விழுந்தபோது என் இதயம் நொறுங்கியது. அப்போது என் மனதில் ஓடியது இதுதான் – உருக்கமான ஆர்ச்சர்

Archer
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த இரண்டாவது போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.

aus

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் ஆர்ச்சர் வீசிய அசுரவேகத்தில் ஸ்டீவ் ஸ்மித் கழுத்தில் பந்து பட்டு அதன்காரணமாக ஸ்மித் மைதானத்தில் சரிந்து விழுந்தார். அப்பொழுது மருத்துவ ஆலோசகர் வரும்வரை ஆர்ச்சர் அவரை கண்டுகொள்ளாமல் பட்லருடன் பேசியபடி எதையும் வெளிக் காட்டாமல் சிரித்துக்கொண்டு இருந்தார்.

அவரின் இந்த செயலை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ஒரு வீரர் அடிபட்டு வலியால் துடித்து கொண்டிருக்கும்போது இப்படித்தான் நடந்து கொள்வதா என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் அக்தரும் தனது அதிருப்தியை தெரிவித்து இருந்தார்.

Smith

இந்நிலையில் போட்டி முடிந்து இந்த சம்பவம் குறித்து பேட்டியளித்த ஆர்ச்சர் கூறியதாவது : ஸ்மித் அடிபட்டு கீழே விழுந்ததும் என் இதயம் நொறுங்கிவிட்டது. மேலும் அவர் எழுந்தபோது தான் என் உயிர் வந்தது. எந்த ஒரு வீரரையும் ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்ல யாரும் நினைக்க மாட்டார்கள் நான் அவ்வளவு மோசமான எண்ணத்தை உடைய நபர் கிடையாது என்று ஆர்ச்சர் உருக்கமாக கூறினார்.

Advertisement