முதல் முறை ஐ.பி.எல் போட்டிகளுக்காக தேர்வானபோது விளையாடமாட்டேன் என்று தோன்றியது – ராஜஸ்தான் வீரர் ஓபன் டாக்

Archer
- Advertisement -

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டும், தடை தள்ளி வைக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற இருந்த பிரம்மாண்ட தொடரான ஐபிஎல் தொடரும் இந்த ஆண்டு கால வரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் எப்போது கிரிக்கெட் இயல்புநிலைக்கு திரும்பும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Archer

- Advertisement -

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் இந்த ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களது வீட்டில் இருந்து சமூக வலைதளம் மூலமாக பொழுதினை கழித்து வருகின்றனர். நாடே ஊரடங்கு முடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையில் தற்போது இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் தவிர முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது அனுபவங்களையும், கருத்துக்களையும் சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் வளர்ந்து வரும் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 7.20 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆர்ச்சர் இங்கிலாந்துக்கு ஆடிய முதல் ஆட்டமே மே மாதம் 2019 ஆம் ஆண்டு தான். அதற்கு முன்புவரை பிக்பாஷ் போன்ற டி20 தொடர்களில் மட்டுமே அவர் விளையாடி வந்தார்.

archer

சர்வதேச அனுபவம் இல்லாததால் எப்படி இங்கிலாந்து அணிக்காக விளையாடும் போகிறோம் என்று நினைத்திருந்த சூழலில் அவருக்கு உலகக் கோப்பை அணியில் வாய்ப்பு கிடைத்து. அந்த தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பிறகு ஆஷஸ் தொடர் என அடுத்தடுத்து அசத்த தற்போது நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது முதல் முறையாக தான் ஐபிஎல் ஏலம் எடுக்கப்பட்ட போது சர்வதேச அனுபவம் இல்லாததால் தான் ஏலத்தில் எடுக்கப்பட்டாலும் எந்த ஒரு போட்டியிலும் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது என நினைத்தேன்.

- Advertisement -

ஆனால் ஏலத்தின் பட்டியலில் என் பெயர் இடம்பெற்று அந்த நிகழ்வை தொலைக்காட்சியில் பார்த்தேன். என் கைகளில் இரண்டு மொபைல் போன்கள் இருந்தன. ஒரு பக்கம் கிறிஸ் ஜோர்டானுடனும் இன்னொரு பக்கம் என் பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்தேன். அதற்கு முன்பு ஜோர்டானிடம் நான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியதில்லை எனவே நான் ஒரு போட்டியில் கூட விளையாட மாட்டேன் என்னை அடிப்படை விலைக்கே எடுக்கப் போகிறார்கள். ஆனால் ஏதாவது ஒரு அணியில் நிச்சயம் எட்டு வாரங்கள் இந்தியாவில் இருக்கப் போகிறேன் என்று கூறி இருந்தேன்.

Archer

ஆனால் என் பெயர் வந்ததும் என்னை ஏலத்தில் எடுக்க ஒரு சில அணிகளின் முன்வந்ததும் கண்டிப்பாக நாம் இந்தியா செல்ல போகிறோம் என்று நினைத்தேன். கண்டிப்பாக ஏதோ ஒரு அணி எடுக்கும் என்ற மகிழ்ச்சி அப்போது எனக்கு இருந்தது .ஆனால் என்னை சற்று அதிகமான விலை கொடுத்தே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியதாக நினைக்கிறேன். எப்படி இருந்தாலும் அவர்களுக்கு நன்றி அடுத்த சில மாதங்களுக்கு இந்தியாவிற்கு நான் செல்வேன் அணியினரை சந்திப்பேன் என்று எனக்குள்ளேயே நினைத்து பூரித்தேன்.

தற்போது நான் அந்த அணிக்காக விளையாட ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. மூன்றாவது வருடமும் அணி வீரர்கள் தேர்வில் பெரிய மாற்றங்கள் இல்லை. பெரும்பாலும் நான் முதல் நாள் அன்று பார்த்தவர்கள் தான் தற்போதும் அணியில் இருக்கிறார்கள். அந்த அணியை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது இதுவும் நல்லதுதான் என்று அவர் கூறி உள்ளார். இதுவரை இரண்டு ஐபிஎல் தொடர்களில் ஆடியுள்ள ஆர்ச்சர் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Archer

2020 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் இந்த வருடத்தின் பிற்பாதியில் ஐபிஎல் நடந்தால் அதில் பங்கேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement