நானும் மனிதன் தான். ரோபோ இல்லை முதல் முறையாக தான் பந்துவீசியது குறித்து வருத்தம் தெரிவித்த ஆர்ச்சர் – விவரம் இதோ

- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பலகட்ட பாதிப்பிற்கு பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் சாமர்த்தியமான முடிவினால் தற்போது இங்கிலாந்தில் மட்டும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

pak

இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 329 குவித்தது. அதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி மோசமாக சொதப்பி 219 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 169 இங்கிலாந்து அணிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. தற்போது இங்கிலாந்து அணி 112 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது .

- Advertisement -

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இவர் தனது பந்து வீச்சில் உள்ள சிரமத்தை பற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில்…

Archer 1

நாங்கள் தற்போது நினைத்தது போல் ஆட்டம் சென்றதாக நான் நினைக்கவில்லை. நிறைய பந்துகளில் விக்கெட்டுகள் விழுந்திருக்க வேண்டும் ஆனால் விழவில்லை .உணவு இடைவேளைக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்கள் நன்றாக பேட்டிங் பிடித்தார்கள்.

Archer

ஒவ்வொரு நாளும் ஒரு பந்து வீச்சாளரால் 90 மைல் வேகத்தில் பந்து வீசி கொண்டே இருக்க முடியாது யாரும் இங்கே ரோபோ கிடையாது என்று தெரிவித்துள்ளார். ஏனெனில் தொடர்ச்சியாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மைதானம் ஒத்துழைப்பது கடினம். அதேபோன்று இன்று எனக்கு கடினமாக அமைந்தது. மைதானம் ஒரு சமயத்திற்கு பிறகு வேகத்திலிருந்து ஸ்விங்கிற்கு மாறியது என்று ஆர்ச்சர் கூறினார்.

Advertisement