ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறிய மற்றொரு நட்சத்திர வீரர் – இருந்த கடைசி நம்பிக்கையும் போச்சு

நடப்பு ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 17 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இத்தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணியின் நம்பிக்கை நடரசத்திரமாக திகழ்ந்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கைவிரல் காயம் காரணமாக தொடரிலிருந்து ஏற்கனவே விலகிவிட்டார்.

csk vs rr

இப்போது அந்த அணியின் இன்னொரு நம்பிக்கை நட்சத்திரமான ஜோஃப்ரா ஆர்ச்சரும் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடுவிரலில் காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆர்ச்சர் அடுத்த வாரம் தொடக்கத்தில் சஷக்ஸ் அணியுடன் தீவிரமான பயிற்சியில் ஈடுபடுவார்.

அவருடைய உடல்நிலையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் சஷக்ஸின் மருத்துவ குழு கண்கானிக்கும். அவர் பந்து வீசும்போது வலி ஏற்படாமல் இருந்தால் அதற்கடுத்த பதினைந்து நாட்களில் அவர் முழுமையான கிரிக்கெட்டில் பங்கேற்பார் என அறிவித்துள்ளது.

Archer 1

ஒருவேளை ஆர்ச்சர் இதையெல்லாம் முடித்துவிட்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்க வந்தாலும் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். அது அவருடைய பந்துவீசும் திறனை பாதிக்கும் என்பதால், தொடரிலிருந்து விலகும் முடிவை ஆர்ச்சரும் ராஜஸ்தான் அணி நிர்வாகமும் இணைந்து எடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

- Advertisement -

Archer

கடந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக பந்துவீசிய ஆர்ச்சர் 14 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றி அந்த சீசனின் மிகுந்த மதிப்புமிக்க வீரர் என்ற விருதையும் தட்டிச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் அந்த அணி ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இப்போது ஆர்ச்சரின் இந்த விலகல் முடிவு மேலும் அவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.