முதல் டி20யில் இதனால மிஸ்ஸான இந்தியாவை.. அடுத்த மேட்ச்சில் 40/6ன்னு தெறிக்க விடுவோம்.. ஆர்ச்சர் பேட்டி

Jofra Archer
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற அப்போட்டியில் இங்கிலாந்தை 132க்கு சுருட்டிய இந்தியா 12.5 ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்து எளிதாக வென்றது.

இந்நிலையில் கடந்த போட்டியில் தாங்கள் நன்றாக பவுலிங் செய்தும் இந்திய பேட்ஸ்மேன்கள் கொடுத்த கேட்ச் ஃபீல்டர்கள் இல்லாத இடங்களில் விழுந்ததாக இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் தெரிவித்துள்ளார். எனவே இரண்டாவது போட்டியில் 40-6 என இந்தியாவை தெறிக்க விடும் அளவுக்கு பவுலிங் செய்வோம் என அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

இந்தியாவுக்கு எச்சரிக்கை:

“மற்ற பவுலர்களை காட்டிலும் முதல் போட்டியில் சூழ்நிலைகள் எனக்கு கொஞ்சம் சாதகமாக இருந்தது என்று நினைக்கிறேன். மற்ற பவுலர்களும் நன்றாக பவுலிங் செய்தார்கள். ஆனால் பேட்ஸ்மேன்கள் மிகவும் அதிர்ஷ்டமாக இருந்தார்கள். சில பந்துகள் இல்லை நிறைய பந்துகள் காற்றில் சென்றன. ஆனால் அது கைகளில் விழவில்லை. எனவே அடுத்த போட்டியில் அவை அனைத்தும் கைகளுக்கு சென்று இந்தியா 40/6 என தடுமாறும் என்று நம்புகிறேன்”

“ஆரம்பத்தில் நீங்கள் எப்போதும் வெற்றிக்காக முயற்சி செய்வீர்கள். ஏனெனில் ஆரம்பத்திலேயே உங்களுக்கு 3 – 4 விக்கெட்டுகள் விழுந்தால் வாய்ப்பு கிடைக்கும். மிடில் ஆர்டரில் எதிரணிகள் கொஞ்சம் வித்தியாசமாக மெதுவாகவே விளையாடுவார்கள். எனவே விக்கெட்டுகள் எடுப்பது தான் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும் என்றால் அதை நீங்கள் முயற்சிக்க வேண்டும்”

- Advertisement -

ஆர்ச்சர் நம்பிக்கை:

“அதை நாங்களும் முதல் போட்டியில் முயற்சி செய்தோம். ஆனால் அது வேலை செய்யவில்லை. எனவே இரண்டாவது போட்டியில் அதை நாங்கள் மீண்டும் முயற்சி செய்வோம்” என்று கூறினார். அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு பயிற்சிகளும் கவனமும் செலுத்தி வருவதாகவும் ஆர்ச்சர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 20-30 பந்திலேயே ஆட்டத்தை மாற்றுவதில் இவர் கில்லாடி.. தொடர்ந்து சேன்ஸ் குடுங்க – பியூஷ் சாவ்லா ஆதரவு

இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியிலும் வென்று முன்னிலையை அதிகரிக்க இந்திய அணியினர் சென்னையில் வலைப்பயிற்சியை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய இங்கிலாந்து அணியும் தயாராகி வருகிறார்கள்.

Advertisement