ஜோப்ரா ஆர்ச்சருக்கு ஏற்பட்ட சிக்கல். இந்த வருஷம் முழுசா விளையாடமுடியாதாம் – அடப்பாவமே

- Advertisement -

இங்கிலாந்து அணியின் இளம் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகி இதுவரை 13 டெஸ்ட் போட்டிகள், 17 ஒருநாள் போட்டிகள் மற்றும் 12 டி20 போட்டிகள் என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி தற்போது வரை முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். மேலும் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக தனது பந்துவீச்சின் மூலம் பெரும் பங்கினை அளித்திருந்தார்.

Archer

- Advertisement -

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் இங்கிலாந்து அணிக்காக முக்கிய பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது அவர் இந்த ஆண்டு முழுவதும் கிரிக்கெட் விளையாட முடியாது என்ற தகவல் கிடைத்துள்ளது. அது மட்டுமின்றி இந்திய அணிக்கு எதிரான இந்த முழு தொடரிலும் அவர் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் ஆஷஸ் தொடர் என முக்கிய தொடர்கள் அனைத்திலும் அவர் விளையாடமாட்டார் என்றும் இந்த வருடம் முழுவதும் அவரால் எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்க முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Archer

ஏற்கனவே முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த மே மாதம் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஆர்ச்சர் அதன்பிறகு சில போட்டிகளில் விளையாடினாலும் தற்போது எடுக்கப்பட்ட ஸ்கேனில் அவருக்கு முழங்கை காயம் மோசமாகி உள்ள காரணத்தினால் இந்த ஆண்டு முழுவதும் அவர் கிரிக்கெட் விளையாட கூடாது என்றும் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

archer 1

இதன் காரணமாக எஞ்சியுள்ள 4 மாதங்கள் அவரால் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப முடியாது என்றும் அடுத்த ஆண்டுதான் இனி அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற மருத்துவ அறிக்கைகள் வெளியாகியுள்ளதால் இங்கிலாந்து அணிக்கு இது வருத்தமான விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement