அசுரவேகத்தில் தலையில் தாக்கிய பந்து. சுருண்டு விழுந்த ஸ்மித்

Smith
- Advertisement -

இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்தது.

அதன் பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வந்தது. ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்து வந்தாலும் ஸ்டீவ் ஸ்மித் நிலைத்து நின்று சிறப்பாக ஆடினார். கடைசி வரை போராடிய ஸ்மித் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இந்த போட்டியில் ஸ்மித் 70 ரன் எடுத்திருந்தபோது ஆர்ச்சர் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார். அப்போது அசுரவேகத்தில் ஆர்ச்சர் வீசிய பந்து 148 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று ஸ்மித்தின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது. அவர் அந்த பந்து பட்டதும் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

கொஞ்ச நேரம் அப்படியே இருந்த அவரை ரிட்டயர்ட் ஹர்ட் மூலம் வெளியேறினார். அதன் பிறகு மீண்டும் வந்து விளையாடிய ஸ்மித் 92 ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement