தொடர்ந்து 4 சிக்ஸர்களை அசுரத்தனமாக விளாசிய ஜோப்ரா ஆர்ச்சர்

Archer
- Advertisement -

ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தோனி வழக்கம் போலவே முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 216 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 74 ரன்களில் (9 சிக்ஸர் 1 பவுண்டரி) , ஸ்டீவ் ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்களும் (4 சிக்ஸர் 4 பவுண்டரி) குவித்தனர். அதற்கடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் டூபிளெஸ்ஸிஸ் தவிர மற்ற யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.

- Advertisement -

37 பந்துகளை சந்தித்த டூபிளெஸ்ஸிஸ் 7 சிக்சர் ஒரு பவுண்டரி என 72 ரன்கள் குவித்தார். துவக்க வீரர் வாட்சன் 33 ரன்களும், இறுதி நேரத்தில் அதிரடியாக 3 சிக்சர்களை விளாசிய தோனி 29 ரன்களும் குவித்தனர். இதனால் சென்னை அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் 20 ஆவது ஓவரை எதிர்கொண்டார். அந்த ஓவரை சென்னை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லுங்கி எங்கிடி வீசினார். கடைசி ஓவரின் முதல் 4 பந்துகளை சிக்சருக்கு விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

மேலும் அந்த கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் 27 ரன்கள் கிடைத்தது. அது எப்படி என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கலாம். முதல் இரு பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசிய ஆர்ச்சர் அடுத்த இரு பந்துகளையும் நோபால் மூலம் சிக்ஸ் அடிக்க ஒரு வொயிடுடன் சேர்த்து 27 ரன்களை குவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement