Jofra Archer : போல்ட் ஆன பேட்ஸ்மேன். ஆனால் பந்து சிக்சரும் சென்றது – விவரம் இதோ

உலகக் கோப்பை தொடரின் பன்னிரண்டாவது போட்டி நேற்று கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், மோர்தசா தலைமை

Archer
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் பன்னிரண்டாவது போட்டி நேற்று கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், மோர்தசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதின.

eng vs ban

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 386 ரன்களை குவித்தது. துவக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய் சிறப்பாக விளையாடி 153 ரன்கள் குவித்தார் மேலும் பட்லர் 64 ரன்களை குவித்தார்.

- Advertisement -

அதன் பின்னர் 387 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 48.5 ஓவர்களில் 280 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்கதேச அணி சார்பாக சாகிப் அல்ஹசன் சதமடித்தார். இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான ஜேசன் ராய் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Roy

இந்த போட்டியில் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நடந்தது. அது யாதெனில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சர் வீசிய பந்தில் வங்கதேச அணி வீரரான சௌமியா சர்க்கார் போல்டாகி ஆட்டம் இழந்தது தான். சௌமியா சர்க்கார் போல்டான பந்து சுமார் 143 கிலோ மீட்டர் வேகத்தில் சீறி வந்தது. இந்த பந்தினை கணிக்க முடியாமல் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

அந்த பந்து ஸ்டம்பில் பட்டு கீப்பருக்கு பின்னால் சிக்சருக்கு பறந்தது. இதனை இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பரான பேர்ஸ்டோவ் ஆச்சரியமாக பார்த்தார். கிரிக்கெட் விளையாட்டில் போல்டாகி ஸ்டம்பு சிறிது தூரம் சென்று நாம் பார்த்திருப்போம். ஆனால் போல்டான பந்து சிக்ஸ் லைனுக்கு பறப்பது அரிதான ஒன்றாகும் இந்த நிலையில் நேற்றைய போட்டியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement