அதிரடியாக அணியில் இருந்து நீக்கப்பட்ட ஆர்ச்சர். 5 நாட்கள் தனிமைப்படுத்த அறிவுரை – ரசிகர்கள் அதிர்ச்சி

Archer
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச தொடரும் நடைபெறாத நிலையில் 117 நாட்களுக்குப் பிறகு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் கடந்த வாரம் 8 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

wi

3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இங்கிலாந்து சென்று தனிமைப் படுத்திக் கொண்டு தற்போது இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக விளையாடி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

- Advertisement -

தற்போது இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் முதல் போட்டியில் பங்கேற்ற இங்கிலாந்து அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கொரோனா விதிமுறைகளை மீறியதன் காரணமாக அணியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Archer 1

ஏனெனில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான உயிர் பாதுகாப்பு சூழலுக்கு நடுவே நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் கொரோனா தொற்று ஏற்படும் வகையில் கட்டுப்பாடுகளை மீறி விளையாடியதாக ஆர்ச்சர் மீது இந்த எச்சரிக்கை தடை வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் நீக்கப்பட்டுள்ள ஆர்ச்சர் 5 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், இரண்டு முறை பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டும் பரிசோதனைகளுக்குப் பிறகு நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தால் தான் இந்த தொடரின் மீதியுள்ள போட்டியில் அவரால் நீடிக்க முடியும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Archer

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்ச்சர் : நான் செய்த காரியத்திற்காக மிகவும் வருந்துகிறேன். நான் என்னை மட்டும் இல்லை அணி நிர்வாகத்தினர் மற்றும் அனைவரையுமே அபாயத்தில் ஆழ்த்தி விட்டேன். நான் இதன் விளைவுகளை முழுவதுமாக ஏற்கிறேன் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement