- Advertisement -
உலக கிரிக்கெட்

51 ரன்ஸ் 5 விக்கெட்ஸ்.. 30 வருடங்கள் கழித்து ஜோப்ரா ஆர்ச்சர் அபார சாதனை.. ஆஸியில் ஆல் ரவுண்டராக அசத்தல்

ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரின் 3வது போட்டி டிசம்பர் 16ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட அத்தொடரில் 2 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2 – 0* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனால் தொடரை வெல்ல அடிலெய்டில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா தங்களது முதல் இன்னிங்சில் 371 ரன்களை குவித்து அசத்தியது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி தனது முதல் ஆசஸ் சதத்தை அடித்து 106 ரன்கள் குவித்தார். அவருடன் உஸ்மான் கவாஜா 82, மிட்சேல் ஸ்டார்க் 54 ரன்களை எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

- Advertisement -

ஆல் ரவுண்டராக ஆர்ச்சர் அசத்தல்:

அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 9, ஓலி போப் 3, பேன் டக்கெட் 29, ஜோ ரூட் 19 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 71/4 என தடுமாறிய இங்கிலாந்துக்கு கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் விளையாடினார். அவருடன் இணைந்து அசத்திய ஹாரி ப்ரூக் 45 ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால் லோயர் ஆர்டரில் ஜேமி ஸ்மித் 22, வில் ஜேக்ஸ் 6, பிரைடன் கார்ஸ் 0 ரன்களில் அவுட்டானார்கள்.

அதனால் 168/8 என மீண்டும் சரிந்த இங்கிலாந்து 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோப்ரா ஆர்ச்சர் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவை அதிரடியாக எதிர்கொண்டார். அதைப் பயன்படுத்தி மறுபுறம் அரை சதமடித்த பென் ஸ்டோக்ஸ் அவரையும் நிதானமாக விளையாடச் சொன்னார்.

- Advertisement -

30 வருடம் கழித்து சாதனை:

அதற்கிணங்க நங்கூரமாக விளையாடிய அவருடன் இணைந்து 9வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பென் ஸ்டோக்ஸ் 83 ரன்கள் குவித்து போது ஸ்டார்க் வேகத்தில் அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய ஆர்ச்சர் தனது முதல் அரை சதமடித்து 51 ரன்கள் குவித்து அவுட்டானார். இதன் வாயிலாக 30 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் 50 ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஆர்ச்சர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: கடுமையான வயிற்று வலியால் கணிசமான உடல் எடை குறைந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – மருத்துவர்கள் குடுத்த அட்வைஸ்

இதற்கு முன் கடைசியாக 1995 சிட்னி போட்டியில் டேரன் கௌக் 51 ரன்கள் மாற்றும் 6 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். இறுதியில் இங்கிலாந்தை 286 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய ஆஸ்திரேலியா 85 ரன்களை முன்னிலையாகப் பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 3, ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.

- Advertisement -