பாக் வீரரை தெறிக்கவிட்ட ஆர்ச்சரின் அருமையான இன்ஸ்விங்கிங் பந்து. க்ளீன் போல்ட் – வைரலாகும் வீடியோ

Archer

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இடையே தற்போதைய கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கிவிட்டது, முதன் முதலாக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையேயான தொடரும் முடிந்தது.

Stokes

இதனைத் தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது, இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி 326 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.

அந்த அணியின் துவக்க வீரர் ஷான் மசூத் 156 ரன்கள் எடுத்தார். பாபர் அசாம் 69 ரன்கள் எடுக்க இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகள் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்நிலையில் இந்த போட்டியின்போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த அருமையான ஒரு இன்ஸ்விங்கிங் பந்தை வீசினார் அந்த பந்தினை கணிக்க தவறிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் அபித் அலி இந்த பந்தினை எதிர்கொள்ள முடியாமல் தனது ஸ்டம்புகளை பறிகொடுத்தார்.

- Advertisement -

இதேபோன்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது அப்பாஸ் வீசிய பந்து பென் ஸ்டோக்ஸ்யை க்ளீன் போல்ட் ஆக்கி வெளியேற்றியது இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.