அம்பயரின் கரிசனத்தால் தடையில் இருந்து தப்பிய ஜோப்ரா ஆர்ச்சர் – விவரம் இதோ

Archer

தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது சென்சூரியனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 121 ரன்களுக்குள் ஒரு விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது. மீதி இரண்டு நாள் ஆட்டம் இருக்கும் நிலையில் இங்கிலாந்து அணி வெற்றிக்கு 255 ரன்கள் தேவை.

Archer 1

இந்தப்போட்டியில் தென்னாபிரிக்க அணி முறையே 284 மற்றும் 272 ரன்களை குவித்தது. இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீசும்போது தொடர்ந்து இரண்டு பந்துகளை பீமராக பேட்ஸ்மேன் மீது வீசினார். இதுபோன்று சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து இரண்டு பீமர்களை வீசும் பட்சத்தில் மீதமிருக்கும் ஆட்டத்தில் பந்து வீச்சாளர் பந்து வீச தடை விதிக்கப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த போட்டியில் ஆர்ச்சர் இரண்டு பீமர்களை வீசியும் அம்பயர் அவரைத் தொடர்ந்து பந்துவீச அனுமதித்தார். அதன் காரணம் யாதெனில் அவர் பீமர்களை வேண்டுமென்றே வீசவில்லை என்றும் அவர் “நக்குள் பால்” என்று அழைக்கப்படும் மெதுவான பந்துகளை வீச முயற்சித்ததாகவும் அது தவறி இருமுறையும் பீமராக சென்றதாகவும் அவர் விளக்கமளித்தார்.

மேலும் அவர் பொறுமையாகவே வீச முயற்சித்தார். இதுபோன்று பந்தை இருமுறை நழுவவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை தொடர்ந்து பந்துவீச அனுமதித்தோம் என்றும் அம்பயர் தரப்பில் கூறப்பட்டது. இதன் காரணமாக அம்பயரின் தரிசனத்தால் ஆர்ச்சர் இந்த போட்டியில் மீதமிருந்த இன்னிங்சில் தடைசெய்யப்படாமல் பந்துவீச அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -