- Advertisement -
உலக கிரிக்கெட்

ஆண்டர்சன் மிஸ் பண்ணிட்டாரு.. சச்சின் வாழ்நாளில் செய்யாத சாதனையை ரூட் நிகழ்துவாரு.. குக் நம்பிக்கை

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 12500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து அசத்தலாக விளையாடி வருகிறார். தற்போது 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இன்னும் 3 – 4 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வாய்ப்பில் இன்னும் அவர் 3000 – 4000 ரன்கள் குவிப்பதற்கு பிரகாச வாய்ப்புகள் உள்ளது.

அதனால் 15921 ரன்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள சச்சின் டெண்டுல்கர் சாதனையை உடைத்து ஜோ ரூட் புதிய சாதனை படைப்பார் என்று சில முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் உலகிலேயே அதிக டெஸ்ட் (200) போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சச்சின் சாதனையை யாராலும் உடைக்க முடியாது என்று சிலர் சொன்னதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சச்சினால் முடியாத 16000:

இருப்பினும் வேகப்பந்து வீச்சாளராக ஜேம்ஸ் ஆண்டர்சன் 188 போட்டிகளில் விளையாடி அதை நெருங்கி தவற விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 16000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரே செய்யாத சாதனையை ஜோ ரூட் நிகழ்த்துவார் என்றும் அலெஸ்டர் குக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“வருங்காலத்தில் மற்ற இங்கிலாந்து வீரர்களால் எளிதில் முறியடிக்க முடியாத சாதனையை ஜோ ரூட் உருவாக்குவார் என்று நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 16,000 ரன்கள் அடித்த முதல் வீரராகவும் அவர் வருவார் என்று நான் நம்புகிறேன். இல்லை என்றாலும் அவர் அதை நெருங்குவார். அது சிறந்த சாதனையாக இருக்கும். ஆனால் அது இன்னும் நிறைய தூரம் இருக்கிறது”

- Advertisement -

ஜோ ரூட் நிகழ்த்துவரா:

“200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஒவ்வொருவரும் பார்த்தோம். அதை எப்போதும் உடைக்க முடியாது என்று சிலர் சொன்னார்கள். இருப்பினும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகள் எடுத்து அதை நெருங்கினார். தற்போது ஆட்டம் மாறியுள்ளது”

இதையும் படிங்க: ஹர்மன்ப்ரீத் வெச்சுகிட்டு 2025 உ.கோ ஜெய்க்க முடியாது.. மந்தனாவும் வேண்டாம்.. அவரை கேப்டனாக்கலாம்.. மித்தாலி ராஜ்

“அதில் சில விஷயங்கள் எப்போதும் அறுவடை செய்யப்படுகிறது” என்று கூறினார். அந்த வகையில் மைக்கேல் வாகன், ரிக்கி பாண்டிங் போன்ற மேலும் சில முன்னாள் வீரர்களும் சச்சின் சாதனையை ரூட் உடைப்பார் என்று கணித்துள்ளார்கள். அது வருங்காலத்தில் நிகழுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

- Advertisement -