- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இப்படி ஏன் பேசுனோம்னு கண்டிப்பா வாஷிங்டன் சுந்தர் வருத்தப்பட்டிருப்பாரு – ஜாஸ் பட்லர் பேட்டி

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது போட்டியின் கடைசி நாளன்று இந்திய வீரர்களை 170 ரன்களில் நிப்பாட்டி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இந்த தொடரிலும் அவர்கள் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளனர்.

ஏன் இப்படி பேசுனோம்னு வாஷிங்டன் சுந்தர் வருத்தப்பட்டிருப்பாரு : ஜாஸ் பட்லர் கருத்து

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 135 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையிருந்த வேளையில் நான்காம் நாள் ஆட்டம் முடிந்து பேசிய இந்திய அணியின் சுரப்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் கூறுகையில் : இந்திய அணி நிச்சயம் கடைசி நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வெற்றி பெறும். இந்த இலக்கினை எட்டும் அளவிற்கு எங்களிடம் தகுதியான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

அப்படி அவர் கூறிய பின்னர் இந்திய அணி தோல்வி அடைந்ததால் வாஷிங்டன் சுந்தரின் இந்த கருத்தின் மீது பெரியளவு விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஏற்கனவே வாஷிங்டன் சுந்தரின் இந்த பேட்டி குறித்து பேசியிருந்த பிரபல வர்ணனையாளர் டேவிட் லாயிட் கூறுகையில் : வாஷிங்டன் சுந்தர் வெறும் வாய் வார்த்தையால் பேசாமல் களத்தில் செயல்பட்டும் காண்பிக்க வேண்டும். மைதானத்தில் எப்போதுமே வார்த்தைகள் பேசாமல் திறமை மட்டும் தான் பேச வேண்டும் என்று காட்டமாக தனது கருத்தினை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் வாஷிங்டன் சுந்தரின் இந்த பேட்டி குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில் : வாஷிங்டன் சுந்தரின் அந்த குறிப்பிட்ட பேட்டியை நானும் பார்த்தேன். உண்மையிலேயே அவர்தான் இப்படி ஒரு வார்த்தையை சொன்னாரா? என்று எனக்கு தோன்றியது. ஒருவேளை அவர் சொல்ல வந்த வார்த்தையை வேறு மாதிரி சொல்லிவிட்டாரோ என்றும் எனக்கு தோன்றியது.

- Advertisement -

வாஷிங்டன் சுந்தரின் இந்த நம்பிக்கை நிறைந்த பேச்சை இங்கிலாந்து வீரர்களும் கண்டிப்பாக பார்த்திருப்பார்கள். நிச்சயம் அதுவே அவர்களை கடுப்பாக்கி இருக்கும். அதனால் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடி இருப்பார்கள். அவருடைய வார்த்தைகள் தான் இங்கிலாந்து அணியின் வீரர்களுக்கு தீமூட்டி இருக்கும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : லார்ட்ஸ் டெஸ்ட் தோல்விக்கு பிறகு எமோஷனலான மெசேஜை பகிர்ந்த முகமது சிராஜ் – ஆறுதல் கூறும் ரசிகர்கள்

நிச்சயம் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பிறகு “நாம் ஏன் இப்படி பேசினோம்?” என வாஷிங்டன் சுந்தர் கண்டிப்பாக வருத்தப்பட்டு இருப்பார் என்றும் ஜாஸ் பட்லர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -