- Advertisement -
உலக கிரிக்கெட்

சச்சினின் சாதனையை எல்லாம் முறியடிக்கும் ஆசை இல்லை.. என்னோட இலக்கே வேற – ஜோ ரூட் ஓபன்டாக்

இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தற்போது இங்கிலாந்து அணியானது பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறும் தருவாயில் உள்ளது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி தங்களது இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெடுகளை இழந்து 53 ரன்கள் மட்டுமே அடித்திருக்க அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 430 ரன்கள் தேவைப்படுகிறது.

சாதனையை நெருங்கிய ஜோ ரூட் :

இதன் காரணமாக இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பே அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் முதல் இன்னிங்சில் 143 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 103 ரன்களையும் குவித்து அசத்தினார்.

- Advertisement -

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய அவர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடிக்கும் வாய்ப்புள்ளது என்று பலரும் பேசி வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்கள் மற்றும் 15,921 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது ஜோ ரூட் இந்த இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அடித்த இரண்டு சதங்கள் மூலம் 34 சதங்களை அடித்துள்ளார். தற்போது 33 வயதாகும் ரூட் இன்னும் சச்சின் சாதனை முறியடிக்க 3544 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. எனவே அவர் இந்த சாதனையை முறியடிக்க நல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் சச்சின் சாதனையை முறியடிப்பது குறித்து பேசிய ஜோ ரூட் கூறுகையில் : நான் தற்போதைக்கு சச்சின் டெண்டுல்கரின் சாதனை குறிவைத்து விளையாடவில்லை. என்னால் முடிந்ததை அணிக்காக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் இங்கிலாந்து அணிக்காக என்னால் எவ்வளவு ரன்கள் குவிக்க முடியுமோ அவ்வளவு ரன்களை குவிக்க விரும்புகிறேன். எவ்வளவு தூரம் அது சென்று முடியும் என்பதை இறுதியில் பார்க்கலாம்.

இதையும் படிங்க : இந்தியாவுக்காக 12 வருஷம்.. அவரோட உறவு அண்ணன் மாதிரி.. அதுல விராட் கோலி தான் பெஸ்ட்.. தோனி பேட்டி

சதம் அடிப்பது என்பது எப்போதுமே ஒரு ஆச்சரியமான உணர்வை தருகிறது. ஆனால் அதைவிட அணி வெற்றி பெறும்போது இன்னும் மகிழ்ச்சி கூடுதலாக இருக்கிறது. எனவே தற்போதைக்கு எந்த சாதனையும் நோக்கி பயணிக்காமல் அணியின் வெற்றிக்காகவே பயணிக்க இருப்பதாக ஜோ ரூட் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -