ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவது இப்போது முக்கியமல்ல. ஏலம் குறித்து பேசிய – ஜோ ரூட்

Root
- Advertisement -

உலகளவில் நடைபெறும் டி20 லீக்குகளில் ஐபிஎல் தொடரானது மிகவும் பிரபலமான தொடராகும். இதில் இந்தியாவைச் சேர்ந்த முக்கிய வீரர்களைத் தவிர்த்து, மற்ற நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்களும் ஒவ்வொரு ஆண்டுகளாக விளையாடி வருகின்றனர். இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கருதப்படும் ஃபேபுலஸ் ஃபோர் பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட் ஆகியோர ஆவர். அதில் ருட்டை தவிற்த்து மற்ற மூவரும் ஐபிஎல் தொடரில் விளையாடி வரூகின்றனர்.

root 3

- Advertisement -

ஆனால், ஜோ ரூட் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடியது கிடையாது. இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டியின் ஏலத்தில் கலந்து கொள்ள ஏராளமான வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்தனர். அதில் 292 வீரர்கள் இறுதிப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஐபிஎல் தொடர் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் ; அந்த அனுபவத்தை அனுபவிக்க ஆசை

அப்படி இருக்க இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் ஐபிஎல் ஏலத்திற்கு தனது பெயரை விண்ணப்பிக்கவில்லை. இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘எனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், ஐபிஎல் தொடரில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த அனுபவத்தை அனுபவிக்க விரும்புகிறேன்.

root 1

ஆனால் இந்த வருடம் ஏராளமான சர்வதேச கிரிக்கெட போட்டிகள் உள்ளன. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் அதிகமாக உள்ளது. ஐபிஎல் ஏலத்தில் இடம்பெறுவதை சரியான நேரம் இது அல்ல என நான் நினைக்கிறேன். அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் இடம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். அல்லது குறைந்த பட்சம் ஐபிஎல் ஏலத்திலாவது கண்டிப்பாக இடம் பெறுவேன்.

உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடிக்க விரும்புகிறேன். மூன்று வடிவிலான போட்டியிலும் விளையாட விரும்புகிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான சவால்கள்’’ என்றும் கூறியுள்ளார்.

Advertisement