இவர் மேல் இருந்த பயத்தால் தான் இரண்டாவது இன்னிங்க்ஸை டிக்ளர் செய்யல – ஜோ ரூட் ஓபன்டாக்

Root
- Advertisement -

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து நிர்ணயித்த 420 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியா 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய வீரர்கள் அஸ்வின், புஜாரா, கோலி உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டபாழுதிலும் இங்கிலாந்து அணியை இந்தியாவல் சமாளிக்க முடியவில்லை. இந்தியாக்கு எதிராக பேட்டிங் , பவுலிங் மற்றும் பீல்டிங்கில் தக்க வீயுகங்களை இங்கிலாந்து அணி வகுத்ததால் இந்திய அணியால் இங்கிலாந்தை வீழ்த்த முடியாமல் போனது.

Eng-bess

- Advertisement -

இதனால் தற்போது இந்திய அணி தொடரை வெல்லவும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நீடிக்கவும், மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டின் அபார இரட்டை சதம் மூலம் அந்த அணி முதல் இன்னிங்சில இமாலய இலக்கான 578 ரன்களை எடுத்தது. அதனைத் தாடர்ந்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்களும பதிலுக்கு அசத்த, முதல் இன்னிங்சில் இந்திய அணி 337 ரன்களுக்கு சுருண்டது.

தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி வந்த இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை 241 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது. ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் இங்கிலாந்து அணியின் ரன் குவிப்புக்கு பிற்பாதியில் முட்டுக்கட்டை போட்டார். இருப்பினும் அந்த அணியின் வெற்றியை இந்தியாவால் தடுக்க முடியாமல் போனது. ஒரு கட்டத்தில் 2வது இன்னிங்சில் இந்திய அணியை விட இங்கிலாந்து அணி அதிக ரன்கள் முன்னிலையில் இருந்த போதும், அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் டிக்ளர் செய்யாமல் இருந்தது பலருக்கு வியப்பாகவே இருந்தது.

root 2

இதனால் 178 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரூட்டின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என பல்வேறு ஜாம்பவான்களும் குழம்பி இருந்த நிலையில் தற்பொழுது அது குறித்து ரூட் மவுனம் களைத்தார். இந்நிலையில் டிக்ளர் செய்யாதது குறித்து பேசிய ஜோ ரூட், அவரின் முடிவுக்கு ரிஷப் பண்ட் தான் காரணம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

pant 1

ஒரு இன்னிங்ஸில் எந்த ஒரு அதிசியத்தையும் நிகழ்த்த கூடிய வல்லமை பண்டுக்கு இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அதிரடி காட்டிய பண்ட் 328 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். அந்த சம்பவம் மீண்டும் நடக்க கூடாது என்பதால் 400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக ஜோ ரூட் தெரிவித்தார்.

Advertisement