
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் அதிக டெஸ்ட் ரன்கள் சாதனையை உடைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இலங்கைக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் அவர் 2 இன்னிங்சிலும் சதம் அடித்தார். அதையும் சேர்த்து தமது கேரியரில் மொத்தமாக அவர் 34 சதங்கள் அடித்துள்ளார்.
அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக அதிக சதங்கள் அடித்த வீரராக ஜோ ரூட் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். மேலும் இதுவரை மொத்தமாக அவர் 12377* ரன்கள் அடித்துள்ளார். மறுபுறம் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தம்முடைய 24 வருட கேரியரில் 200 போட்டிகளில் 15921 ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்துள்ளார்.
எனவே 33 வயதாகும் ரூட் இன்னும் குறைந்தது 4 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அடுத்த 4 வருடங்களில் மேற்கொண்டு தேவைப்படும் 3543 ரன்களை குவித்து சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை ஜோ ரூட் உடைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருப்பதால் ஜோ ரூட் அந்த சாதனையை உடைப்பார் என்று ரிக்கி பாண்டிங் போன்ற முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கைக்கு எதிராக லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் ஜோ ரூட் இதுவரை 2 கேட்ச்கள் பிடித்துள்ளார். அந்த 2 கேட்ச்களையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் மொத்தம் 200 கேட்ச்களை பிடித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 கேட்ச்கள் பிடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் ஜோ ரூட் படைத்துள்ளார்.
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகளை பிடித்த வீரர்களின் பட்டியலில் அவர் தென்னாப்பிரிக்காவின் ஜேக் காலிஸுடன் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த பட்டியல்:
1. ராகுல் டிராவிட் : 210
2. மகிளா ஜெயவர்தனே : 205
3. ஜேக் காலிஸ்/ஜோ ரூட் : 200
4. ரிக்கி பாண்டிங் : 196
இதையும் படிங்க: 2 மீட்டர்ல மாறிடுச்சு.. தெ.ஆ வெற்றியை பறித்த சூர்யாகுமாரின் கேட்ச் பற்றி.. ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ்
இதிலிருந்து இன்னும் 10 கேட்ச்கள் பிடித்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என்ற இந்தியாவின் ராகுல் டிராவிட் சாதனையை உடைத்து ஜோ ரூட் புதிய உலக சாதனை படைப்பார். அந்த வகையில் சச்சினின் சாதனையை உடைப்பதற்கு முன் டிராவிட்டின் இந்த சாதனையை ரூட் உடைப்பதற்கு 100% வாய்ப்புள்ளது. மொத்தத்தில் சச்சின், டிராவிட் ஆகியோரின் சாதனைகளை இந்தியர்கள் அல்லாத வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் உடைக்கப் போகிறார் என்பது இந்திய ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.