47 வருடம் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விசித்திர சாதனைக்கு சொந்தக்காரரான ஜோ ரூட் – விவரம் இதோ

Root
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 183 ரன்களை குவித்தது. அதன் பின்னர் தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 278 ரன்கள் குவித்தது.

indvseng

- Advertisement -

அதன்பின்னர் 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியானது 303 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது. இதன் காரணமாக 208 ரன்கள் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்று உள்ளதால் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின்போது இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்த ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் இந்த ஆண்டு அதாவது 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். அவர் 71 ரன்களைக் கடக்கும்போது இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

root 3

மேலும் 47 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக டென்னிஸ் ஆர்மிஸ் என்பவர் 1974ஆம் ஆண்டு 186 நாட்களில் ஆயிரம் ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்து இருந்தார். அதனை தொடர்ந்து ஒரே ஒரு ஆண்டில் 219 நாட்களில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர் ஆக இரண்டாவது இடத்தில் ஜோ ரூட் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement