221 பந்துகள்.. க்ளாஸ் காட்டும் ரூட்.. திருப்பி அடிக்கும் இங்கிலாந்து.. முதல் முறையாக தடுமாறும் இந்தியா

Joe Root 2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் துவங்கியது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த பெரிய தொடரில் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் 2 – * என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. எனவே இப்போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஓப்பனிங் ஜோடியில் பென் டக்கெட்டை 11 ரன்களில் காலி செய்த அறிமுக இந்திய வீரர் ஆகாஷ் தீப் அடுத்ததாக வந்த ஓலி போப்பை டக் அவுட்டாக்கினார். அத்துடன் மறுபுறம் 42 ரன்கள் அடித்து சவாலை கொடுத்த ஜாக் கிராவ்லியையும் போல்டாக்கிய அவர் இந்தியாவுக்கு அபாரமான துவக்கத்தை கொடுத்தார்.

- Advertisement -

அசத்தும் ரூட்:
அந்த நிலைமையில் வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் நிதானமாக விளையாடினார். ஆனால் அவருடன் எதிர்புறம் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக விளையாட முயற்சித்த ஜானி பேர்ஸ்டோ 38 (35) ரன்களில் அஸ்வின் சுழலில் சிக்கினார். அடுத்ததாக வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3 ரன்களில் ரவீந்திர ஜடேஜா சுழலில் அவுட்டானதால் 112/5 என இங்கிலாந்து ஆரம்பத்திலேயே பெரிய சரிவை சந்தித்தது.

அப்போது வந்த பென் போக்ஸுடன் சேர்ந்து மறுபுறம் நிதானமாக விளையாடிய ஜோ ரூட் தன்னுடைய கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார். குறிப்பாக இத்தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் பஸ்பால் அணுகுமுறையை பின்பற்றி அதிரடியாக விளையாடுகிறேன் என்ற பெயரில் குருட்டுத்தனமான ஷாட்டை அடித்த அவர் விக்கெட்டை இங்கிலாந்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

அதனால் நீங்கள் இயற்கையான ஆட்டத்தை விளையாடுமாறு மைக்கேல் வாகன், ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் ஆலோசனை தெரிவித்தனர். அந்த நிலையில் ஒரு வழியாக இப்போட்டியில் ஜோ ரூட் அனுபவத்தை காட்டி நிதானமாக விளையாடி அரை சதமடித்து சவாலை கொடுத்தார். நேரம் செல்ல செல்ல நேர்த்தியாக விளையாடிய அவர் விக்கெட்டை விடாமல் முதல் நாள் தேநீர் இடைவெளியில் 67* ரன்கள் குவித்துள்ளார். அவருடன் கைகோர்த்துள்ள பென் ஃபோக்ஸ் 28 ரன்கள் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இதுதாங்க உண்மையான நாம பாத்த ஜோ ரூட்.. ஒருவழியா முடிவுக்கு வந்த சொதப்பல் – விவரம் இதோ

மேலும் 221* பந்துகளை எதிர்கொண்டுள்ள ரூட் – ஃபோக்ஸ் ஜோடி இந்த தொடரில் ஒரு போட்டியில் அதிக பந்துகளை எதிர்கொண்ட இங்கிலாந்து ஜோடியாக அசத்தி வருகிறது. இதற்கு முன் ஹைதராபாத் நகரில் நடந்த முதல் போட்டியில் ஓலி போப் – பே போக்ஸ் 181 பந்துகள் எதிர்கொண்டதே முந்தைய பார்ட்னர்ஷிப்பாகும். அதனால் தேனீர் இடைவேளையில் இங்கிலாந்து மேற்கொண்டு விக்கெட்டை இழக்காமல் 198/5 ரன்கள் எடுத்து இந்தியாவை திருப்பி அடித்து வருகிறது. மறுபுறம் உணவு இடைவெளிக்கு முன் 5 விக்கெட்டுகளை எடுத்த இந்தியா இந்த தொடரிலேயே முதல் முறையாக ஒரு செஷனில் ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் தடுமாறிள்ளது.

Advertisement