லார்ட்ஸ் டெஸ்ட் : ஒரு சதம் அடித்து 3 சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறிய ஜோ ரூட் – விவரம் இதோ

Root

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 364 ரன்கள் குவிக்க தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணியானது இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 119 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

bairstow 2

இந்நிலையில் தற்போது இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தை விளையாடி வரும் இங்கிலாந்து அணி தற்போது கிட்டத்தட்ட இந்திய அணியின் ஸ்கோரை நெருங்கிவிட்டது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இன்று தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.

- Advertisement -

அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் மூன்று முக்கிய சாதனைகளை படைத்துள்ளார். அந்த சாதனைகள் யாதெனில் ஜோ ரூட் தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 21-வது சதத்தை குவித்துள்ளார். அதில் அவர் கேப்டனாக மட்டும் 11 சதங்களை விளாசியுள்ளார்.

root 2

அதுமட்டுமின்றி இங்கிலாந்து வீரர்களில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் தற்போது ரூட் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அலைஸ்டர் குக் 33 சதங்களுடன் முதலாவது இடத்திலும், கெவின் பீட்டர்சன் 23 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும், தற்போது ஜோ ரூட் 22 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

- Advertisement -

root 1

அதுமட்டுமின்றி ஒரு ஆண்டில் அதிக சதங்கள் விளாசிய இங்கிலாந்து கேப்டன் என்ற பட்டியலிலும் ஜோ ரூட் முதலிடம் பிடித்துள்ளார். 1990ஆம் ஆண்டு கிரகாம் கூச் இங்கிலாந்து அணி கேப்டனாக ஒரு ஆண்டில் நான்கு சதங்கள் அடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது 21 வருடங்கள் கழித்து ஒரே ஆண்டில் 5 சதங்கள் கேப்டனாக ரூட் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement