- Advertisement -
உலக கிரிக்கெட்

அலைஸ்டர் குக் மற்றும் ராகுல் டிராவிடை பின்னுக்கு தள்ளிய ஜோ ரூட் – அதோடு வெ.இ வீரரின் சாதனையும் முறியடிப்பு

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 18-ஆம் தேதி நாட்டிங்ஹாம் நகரில் துவங்கியது. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 416 ரன்களை குவித்து நல்ல ஒரு அடித்தளத்தை அமைத்தது.

- Advertisement -

அதே வேளையில் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது முதல் இன்னிங்சில் 457 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக 41 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது இன்னிங்ஸிலும் 425 ரன்கள் குவித்தது.

இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 385 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத வெஸ்ட் இண்டீஸ் அணியானது இரண்டாவது இன்னிங்சில் 143 ரன்கள் மட்டுமே குவித்தது.இதன் காரணமாக இங்கிலாந்து அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தற்போதே கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இரண்டாவது இன்னிங்சில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் 178 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகளுடன் 122 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அலைஸ்டர் குக் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரது சாதனையை கடந்துள்ளார்.

இதையும் படிங்க : இந்த விடயத்தை சரி பண்ணா போதும்.. ஆப்கானிஸ்தான் அணியை அடிச்சிக்க ஆள் இல்ல – ஆப்கன் கோச் டிராட்

அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 5 இரட்டை சதங்கள் 32 சதங்கள் என 50 ரன்கள் சராசரியுடன் 11,940 ரன்கள் குவித்திருக்கும் ஜோ ரூட் குறைந்த இன்னிங்ஸ்களில் 32 டெஸ்ட் சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதோடு மட்டுமின்றி முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரரான சந்திரபாலின் 11867 ரன்களை பின்னுக்கு தள்ளி தற்போது 11940 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -