இலங்கை வீரர்களுடன் கைகுலுக்க மாட்டோம். அதற்கு காரணம் இதுதான் ஜோ ரூட் பேட்டி – இது என்ன புதுசா இருக்கு

Root
- Advertisement -

இங்கிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது . இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

root

- Advertisement -

அதாவது இலங்கை வீரர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளார். கோரோணா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கங்களையம் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. அதனால் வெளிநாடுகள் பயணத்தின் போது அதி ஜாக்கிரதையாக மக்கள் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த வைரஸ் எப்படி ஒருவரை தாக்கிறது என்பது தெரியாமல் மருத்துவர்கள் குழம்பிப் போயுள்ளனர் இதன் காரணமாக இந்த அறிவிப்பை இலங்கை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் வெளியிட்டுள்ளார் .

root

முன்னதாக தென் ஆப்பிரிக்காவிற்கு இங்கிலாந்து அணி வீரர்கள் சுற்றுப்பயணம் செய்தபோது அந்த அணி வீரர்களுக்கு காய்ச்சல் மற்றும் உணவுக் குழாய் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பை கடுமையாகாமல் தவிர்ப்பதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஜோ ரூட்.

இருந்தாலும் எதிர் அணி வீரர்களுடன் பரஸ்பர வாழ்த்துதல் தொடரும் எனவும் அறிவித்துள்ளார் ஜோ ரூட். இங்கிலாந்து அணியின் கேப்டனின் இந்த கருத்தினால் பலவிதமான விமர்சனங்கள் எழுந்தாலும் அவரின் இந்த முடிவிற்கு ஆதரவும் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement