நினச்சு கூட பாக்கல.. சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடிப்பீர்களா? என்ற கேள்விக்கு ரூட் பதில்

- Advertisement -

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் நவீன டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக செயல்பட்டு வருகிறார். கடந்த 2012இல் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடித்து இங்கிலாந்தின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்கள். அதனால் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீல் ஸ்மித் ஆகியோருடன் ஜோ ரூட்டும் உலகின் டாப் 4 சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.

சொல்லப்போனால் விராட் கோலி, வில்லியம்சன், ஸ்மித் ஆகியோரை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடும் அவர் அந்த நால்வரில் 10,000 ரன்கள் அடித்த முதல் வீரராக சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் இது வரை 142 போட்டிகளில் 11940* ரன்கள் குவித்துள்ள ஜோ ரூட் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

சச்சினை முந்த முடியுமா:
அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஜொலிக்கும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை அவர் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சொல்லப்போனால் 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள ஜோ ரூட் குறைந்தது இன்னும் 5 வருடங்கள் விளையாடுவார் என்று பார்க்கப்படுகிறது. அந்த 5 வருடங்களில் இன்னும் 5,000 ரன்கள் அடித்தால் 15921 ரன்கள் குவித்துள்ள சச்சினை முந்தி ஜோ ரூட் உலக சாதனை படைக்க முடியும்.

எனவே வருங்காலங்களில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் உடைப்பார் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்படியெல்லாம் பேசி கண் வைத்தால் பின்னர் தம்முடைய செயல்பாடுகள் மந்தமாகி சச்சின் சாதனையை முறியடிக்க முடியாமல் போகலாம் என ஜோ ரூட் கலகலப்பாக தெரிவித்துள்ளார். சச்சின் சாதனையை உடைப்பீர்களா? என்ற கேள்விக்கு சமீபத்திய பேட்டியில் அவர் பதிலளித்தது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியாவின் நாக்பூரில் அறிமுகப் போட்டியில் களமிறங்கிய போது இந்த உச்சத்தை எட்டுவேன் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை. ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் விளையாடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். டாப் 7 இடங்களில் உள்ள அற்புதமான வீரர்களை பற்றி ஒரே மூச்சில் பேசுவதற்கு உங்களை நீங்கள் கிள்ள வேண்டும். எனவே நான் பணிவானவன்”

இதையும் படிங்க: பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக மாற இருக்கும் முன்னாள் இந்திய வீரர் – யார் தெரியுமா?

“ஆம் அதை செய்வது நன்றாக இருக்கும். ஆனால் என்ன நடக்கும் என்பதை யார் அறிவார்? இது போன்ற பேச்சுகளுக்குப் பின் நான் ஃபார்மை இழக்கலாம். உண்மையில் அடுத்த சில போட்டிகளில் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியாது. எனவே தொடர்ந்து நான் வேலை செய்ய வேண்டும். அனைவருக்கும் முன்பே ஒரு காலை முன்னே வைக்க வேண்டும். பின்னர் நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்பதை பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement