அதிக சம்பளம் பெறும் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய வீரர் – யார் தெரியுமா ?

Kohli-1

சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களை பட்டியலிட்டால் நிச்சயம் நம் அனைவரது மனதில் நிற்கும் பெயர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான். ஏனெனில் தற்போதைய கிரிக்கெட் உலகில் புகழின் உச்சத்தில் உள்ள விராட் கோலி கிரிக்கெட் விளையாடுவது மட்டுமின்றி பல வழிகளில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார். கோலிக்கு பலவழிகளிலும் கோடிகள் கொட்டி வருகின்றன.

Kohli

மேலும் அவருக்கு விளம்பரங்கள், பிராண்ட் அம்பாசிடர், தூதுவர் என பல வழிகளில் பணம் கோடிக்கணக்கில் கொட்டி வருகிறது. அதுமட்டுமின்றி உலகின் மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியம் ஆன பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு சம்பளத்தை வாரி இறைத்து வருகிறது. அதன்படி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பிசிசிஐ சார்பாக ஏ+ பிரிவில் ஆண்டிற்கு ஏழு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

- Advertisement -

கோலி ஐ.பி.எல் போட்டிகளுக்காக ஆண்டிற்கு 17 கோடி ருபாய் பெங்களூரு அணி நிர்வாகத்திடம் இருந்து பெற்றுவருகிறார் என்பது வேறுகதை. இதனால் அதிக சம்பளம் பெறும் கிரிக்கெட் வீரராக நமது கேப்டன் விராட் கோலி இருப்பார் என்று நம்மில் பலரும் நினைக்கலாம். ஆனால் பிரபல தனியார் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள சம்பளப் பட்டியலில் கோலியை தாண்டி சம்பளம் பெறும் வீரரின் பெயரை வெளியிட்டுள்ளது.

Root

அதன்படி அதிக சம்பளம் பெறும் கேப்டனாக ஜோ ரூட் திகழ்கிறார். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் அவர் ஆண்டிற்கு 7 லட்சம் பவுண்டுகளை சம்பளமாக இங்கிலாந்து நிர்வாகத்திடம் இருந்து பெறுகிறார். இந்திய மதிப்பில் அதன் மதிப்பு 8 கோடியை தாண்டும் அதேபோன்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சரின் சம்பளமும் விராட் கோலியை விட அதிகம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஆஸ்திரேலிய கேப்டன் 5 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். இதன்மூலம் கோலியை விட கேப்டனாக அதிகம் சம்பாதிக்கும் வீரராக ஜோ ரூட் இருக்கிறார் என்ற தகவல் தெரிந்துள்ளது. ஆனால் கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற வகைகளில் பார்க்கையில் கோலியே அதிகளவு சம்பளத்தை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement