Ashes 2023 : சச்சின் டெண்டுல்கரின் சரித்திர உலக சாதனையை சமன் செய்த ஜோ ரூட் – 2 ஆல் டைம் சாதனைக்கும் குறி

Joe Root 2
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே பின்னடைவுக்குள்ளான இங்கிலாந்து 3வது போட்டியில் வென்று தக்க பதிலடி கொடுத்தது. இருப்பினும் 4வது போட்டியில் போராடிக் கொண்டு வந்த வெற்றியை மழை தடுத்ததால் நடப்பு சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியா ஆஷஸ் கோப்பையை தக்க வைத்து அசத்தியது.

ENG vs AUS

- Advertisement -

அந்த நிலையில் ஜூலை 27ஆம் தேதி லண்டன் ஓவலில் துவங்கிய கடைசி போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 283 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 85 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியும் 295 ரன்கள் 12 ரன்கள் முன்னிலை பெற்றது.

சச்சினுக்கு நிகராக ரூட்:
அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து பொறுப்புடன் செயல்பட்டு 3வது நாள் முடிவில் 389/9 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஜோ ரூட் 91, ஜானி பேர்ஸ்டோ 78, ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4* விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

முன்னதாக இங்கிலாந்தை சேர்ந்த நம்பிக்கை நட்சத்திர வீரர் ஜோ ரூட் கடந்த சில வருடங்களாகவே விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகிய ஃபேப் 4 வீரர்களை மிஞ்சும் அளவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு முதல் ஆளாக 10,000 ரன்களை கடந்து அசத்தி வருவதை அனைவரும் அறிவோம். அந்த வரிசையில் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரின் 5 போட்டிகளிலும் அசத்திய அவர் மொத்தமாக 1 சதம் 2 அரை சதங்கள் உட்பட 412 ரன்களை 51.50 என்ற நல்ல சராசரியில் குவித்து மீண்டும் சிறப்பாகவே செயல்பட்டார்.

- Advertisement -

அந்த வகையில் இத்தொடரில் 412 ரன்கள் குவித்த அவர் தம்முடைய கேரியரில் இதுவரை மொத்தமாக 19வது முறையாக ஒரு குறிப்பிட்ட தொடரில் 300க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இதன் வாயிலாக 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்களில் 300க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த வீரர் என்ற ராகுல் டிராவிட், பிரைன் லாரா, ரிக்கி பாண்டிங் போன்ற ஜாம்பவான்களை மிஞ்சியுள்ள ஜோ ரூட் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 19 முறை
1. ஜோ ரூட் : 19* முறை
2. ராகுல் டிராவிட் : 18 முறை
2. பிரைன் லாரா : 18 முறை
3. ரிக்கி பாண்டிங் : 17 முறை
3. அலெஸ்டர் குக் : 17 முறை

SAchin Tendulkar Joe Root

அத்துடன் இந்த போட்டியில் எடுத்த 91 ரன்களையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 60வது அரை சதத்தை பதிவு செய்துள்ள அவர் ஆல் டைம் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (68) சந்தர்பால் (66) ஆலன் பார்டர் (63) ராகுல் டிராவிட் (63) ரிக்கி பாண்டிங் (62) ஆகியோரைத் தொடர்ந்து அதிக அரை சதங்கள் அடித்த 6வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். குறிப்பாக இன்னும் ஓரிரு வருடத்திற்குள் 9 அரை சதமடித்து முதலிடத்தில் இருக்கும் சச்சின் ஆல் டைம் சாதனையை அவர் உடைப்பதற்கு பிரகாச வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இத்தனைக்கும் தற்போது வெறும் 32 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இதுவரை 135 போட்டிகளிலேயே 11416* ரன்களை குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 11000 ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஏற்கனவே உடைத்துள்ளார்.

Joe Root

இதையும் படிங்க:IND vs WI : சொதப்பிய இந்தியாவுக்கு 5 வருடத்துக்கு பின் நேர்ந்த பரிதாபம் – மோசமான வரலாற்றை வெஸ்ட் இண்டீஸ் நிறுத்தியது எப்படி?

அந்த நிலைமையில் குறைந்தது இன்னும் 5 வருடங்களாவது விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் இன்னும் 5000 ரன்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் உலக சாதனை படைத்துள்ள இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் (15921) ஆல் டைம் சாதனையை உடைத்து புதிய சாதனை படைப்பதற்கான வாய்ப்பும் பிரகாசமாகியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது.

Advertisement