லீட்ஸ் டெஸ்டில் பெற்ற வெற்றியோடு சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைத்த – ஜோ ரூட்

Root
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இங்கிலாந்து அணி சார்பாக முதல் இரண்டு போட்டிகளில் ஜோ ரூட், ஆண்டர்சன், ராபின்சன் ஆகிய மூவரைத் தவிர மற்ற எந்த வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை.

indvseng

- Advertisement -

இந்நிலையில் தற்போது மூன்றாவதாக லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் அனைத்து வீரர்களும் தங்களது பங்களிப்பை சரியாக வழங்க இங்கிலாந்து அணி அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் முதல் இன்னிங்சில் சதம் அடித்து அசத்தினார். அதுமட்டுமின்றி தற்போது கேப்டனாகவும் அவர் இங்கிலாந்து அணி சார்பாக ஒரு மாபெரும் சாதனையை எட்டியுள்ளார். அந்த சாதனை யாதெனில் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டனாக அவர் சாதனை படைத்துள்ளார்.

Root

இதற்கு முன்னதாக மைக்கல் வாகன் 51 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி கேப்டனாக செயல்பட்டு 26 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து ஸ்டார்ஸ் 50 போட்டிகளில் 24 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருந்தார். அதேபோன்று அலெஸ்டர் குக் 59 போட்டிகளில் 24 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.

Root

இந்நிலையில் லீட்ஸ் டெஸ்டில் பெற்ற வெற்றியோடு ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தற்போது 27 வது வெற்றியை பதிவு செய்துள்ளதால் இங்கிலாந்து அணி சார்பாக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement