332 ரன்ஸ்.. சந்தர்பால், காலிஸ், பாண்டிங்கை முந்தி 2 சாதனை படைத்த ரூட்.. இந்தியாவுக்கு இன்னிங்ஸ் தோல்வி உறுதியா?

Joe Root
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் நான்காவது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. ஜூலை 23ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா போராடி 358 ரன்கள் அடித்தது.

அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61, ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பண்ட் காயத்துடன் விளையாடி 54 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி – பென் டக்கெட் ஆகியோர் அதிரடியாக விளையாடி இந்தியாவை வெளுத்து வாங்கினார்கள்.

- Advertisement -

இன்னிங்ஸ் தோல்வி வருகிறதா:

பஸ்பால் ஸ்டைலை மீண்டும் கையிலெடுத்து இந்தியாவை ஆரம்பத்திலேயே அடித்த அந்த ஜோடி 166 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டியது. அதில் ஜாக் கிராவ்லி 84 ரன்களில் ஜடேஜா சுழலில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் சதத்தை நெருங்கிய டக்கெட் 94 ரன்னில் கம்போஜ் வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஓலி போப் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் ஜோடி சேர்ந்து இந்தியாவை பந்தாடினார்கள்.

மிகவும் சுமாராக பவுலிங் செய்த இந்தியாவை கலங்கடித்த அந்த ஜோடியிலும் இருவருமே அரை சதத்தை அடித்தார்கள். அவர்களுடைய நல்ல ஆட்டத்தால் 3வது நாள் உணவு இடைவெளியில் 332/2 ரன்களை எடுத்துள்ள இங்கிலாந்து இந்தியாவை விட 26 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. இங்கிருந்து அந்த அணி 600 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்குமோ என்ற அச்சத்தில் ரசிகர்கள் கவலையில் வந்துள்ளனர்.

- Advertisement -

ஜோ ரூட் சாதனை:

களத்தில் ரூட் 59*, போப் 68* ரன்களுடன் உள்ளனர். இதையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த வீரர் என்ற ரிக்கி பாண்டிங், ஜேக் காலிஸ் சாதனையை உடைத்துள்ள ரூட் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர்: 119
2. ஜோ ரூட்: 104*
3. ஜேக் காலிஸ்/ரிக்கி பாண்டிங்: தலா 103
4. ராகுல் டிராவிட்: 99

இதையும் படிங்க: ஒரு வீரர் கூட பேக்கப் இல்ல.. இந்திய டெஸ்ட் அணியின் டீம் செலக்ஷனை விமர்சித்த – ஆகாஷ் சோப்ரா

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற சிவ்நரேன் சந்திர்பால் சாதனையையும் உடைத்துள்ள அவர் சச்சினை நெருங்கி புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர்: 68
2. ஜோ ரூட்: 67*
3. சிவ்நரேன் சந்தர்பால்: 66
4. ராகுல் டிராவிட்: 63
5. ஆலன் பார்டர்: 62

Advertisement