சச்சினை முந்தி வரலாறு படைத்த ரூட் – நியூஸிலாந்தை சாய்த்து வெற்றி பயணத்தை துவங்கிய இங்கிலாந்து

Joe Root Sachin Tendulkar
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் உலகின் முதல் டெஸ்ட் சாம்பியனாக சாதனை படைத்துள்ள கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. அதனால் உலக ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த இந்த தொடரின் முதல் போட்டி கடந்த ஜூன் 2-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது.

ENg vs NZ Kane Williamson Ben Stokes

- Advertisement -

அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இங்கிலாந்தின் அதிரடியான ஸ்விங் பந்துகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வெறும் 132 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு டாம் லாதம் 1, கேப்டன் கேன் வில்லியம்சன் 2, டேவோன் கான்வே 3 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வரிசையாக அவுட்டான நிலையில் அதிகபட்சமாக காலின் டி கிரான்ஹோம் 42* ரன்களும் டிம் சவுத்தி 26 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அட்டகாசமாக செயல்பட்ட மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் அறிமுக போட்டியில் களமிறங்கிய மாட்டி போட்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட் எடுத்தனர்.

சரிந்த இங்கிலாந்து:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்தையும் அதிரடியாக பந்துவீச மடக்கிப் பிடித்த நியூஸிலாந்து பவுலர்கள் வெறும் 141 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர். இத்தனைக்கும் அந்த அணியின் லீஸ் 25 ரன்கள் ஜேக் கிராவ்லி 43 என அந்த அணியின் தொடக்க வீரர்கள் 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் ஜோ ரூட் 11, ஜானி பேர்ஸ்டோ 1, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 1 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். அந்த அளவுக்கு நியூசிலாந்து சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய டிம் சவுத்தி 4 விக்கெட்டுகளும் 3 விக்கெட்டும் எடுத்தனர்.

Ben Stokes ENG vs NZ

அதனால் 9 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்துக்கு டாம் லாதம் 14, வில் எங் 1, கேன் வில்லியம்சன் 15, டேவோன் கான்வே 13 என மீண்டும் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 56/4 சரிந்த அந்த அணிக்கு படு தோல்வி உறுதி என நினைத்த வேளையில் ஜோடி சேர்ந்த டார்ல் மிட்சேல் – டாம் ப்ளன்டல் ஆகியோர் நிதானமாகவும் பொறுப்பாகவும் பேட்டிங் செய்து 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தார்கள்.

- Advertisement -

ஜோ ரூட் மாஸ்:
அதனால் 251/4 என நல்ல நிலையை எட்டிய அந்த அணிக்கு சதமடித்து காப்பாற்றிய மிட்சேல் 108 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கோலின் டி கிரான்ஹோம் 0, கெய்ல் ஜமிசன் 0 என அடுத்தடுத்து அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அதனால் 251/7 என மீண்டும் சறுக்கிய அந்த அணிக்கு 96 ரன்கள் எடுத்து போராடிக்கொண்டிருந்த ப்ளன்டால் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு அவுட்டானதால் 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து 285 ரன்களுக்கு அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் ஸ்டுவர்ட் ப்ராட் மற்றும் மாட்டி போட்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 277 என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து லீஸ் 20, ஜேக் கிராவ்லி 9, ஓலி போப் 10, ஜானி பேர்ஸ்டோ 16 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 69/4 என திணறியது. அந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த முன்னாள் கேப்டன் ஜோ ரூட் மற்றும் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினர்.

- Advertisement -

அதனால் வெற்றிக்கு இன்றைய 4-வது நாளில் 61 ரன்கள் தேவைப்பட்ட போது 54 ரன்களில் ஸ்டோக்ஸ் அவுட்டானார். இருப்பினும் கடைசி வரை அவுட்டாகாமல் நியூசிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக மாறிய ஜோ ரூட் 12 பவுண்டரியுடன் சதமடித்து 115* ரன்கள் விளாசினார். அவருடன் பென் போக்ஸ் 32* ரன்கள் எடுத்ததால் 279/5 ரன்களை எடுத்து இலக்கை எட்டிப் பிடித்த இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Joe Root

சச்சினை முந்தி:
அதனால் புதிய பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் தங்களது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை வெற்றியுடன் துவக்கிய அந்த அணிக்கு 115 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ஜோ ரூட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

1. அதைவிட இந்த 115 ரன்கள் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்த 14-வது பேட்ஸ்மேன் மற்றும் 2-வது இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற வரலாற்றையும் அவர் படைத்தார்.

root

2. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயதில் 10000 ரன்களை எடுத்த பேட்ஸ்மேன் என்ற சச்சினின் சாதனையை முந்தி அலெஸ்டர் குக் சாதனையை சமன் செய்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. அலெஸ்டர் குக் : 31 வருடம் 157 நாட்கள்
2. ஜோ ரூட் : 31 வருடம் 157 நாட்கள்*
3. சச்சின் டெண்டுல்கர் : 31 வருடம் 326 நாட்கள்

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 சீசனில் கோப்பையை வெல்வதற்காக லக்னோ விடுவிக்க வேண்டிய வீரர்களின் பட்டியல்

3. மேலும் வரலாற்றில் மிகக் குறைந்த நாட்களில் 10000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. ஜோ ரூட் : 9 வருடங்கள் 171 நாட்கள்*
2. அலெஸ்டர் குக் : 10 வருடங்கள் 87 நாட்கள்
3. ராகுல் டிராவிட் : 11 வருடங்கள் 280 நாட்கள்

Advertisement