57/3 என சரிந்த இங்கிலாந்து.. தனது வழியில் காப்பாற்றிய ரூட்.. இந்தியாவுக்கு எதிராக உலக சாதனை

Joe Root 4
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் துவங்கியது. 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் இந்த தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள இப்போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 47 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த பென் டக்கெட்டை 11 ரன்களில் அவுட்டாக்கிய அறிமுக இந்திய வீரர் ஆகாஷ் தீப் அடுத்ததாக வந்த ஓலி போப்பை டக் அவுட்டாக்கினார். அத்துடன் மறுபுறம் 42 ரன்கள் அடித்து சவாலை கொடுத்த ஜாக் கிராவ்லியையும் கிளீன் போல்ட்டாக்கிய அவர் இந்தியாவுக்கு அபாரமான துவக்கத்தை கொடுத்தார்.

- Advertisement -

ரூட் உலக சாதனை:
அதனால் 57/3 என தடுமாறிய இங்கிலாந்துக்கு அடுத்ததாக வந்த நட்சத்திர வீரர் ஜோ ரூட் நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் அதிரடியாக விளையாட முயற்சித்த ஜானி பேர்ஸ்டோ 38 ரன்களில் அஸ்வின் சுழலில் அவுட்டாக அடுத்ததாக வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3 ரன்களில் ரவீந்திர ஜடேஜாவிடம் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜோ ரூட்டுக்கு அடுத்ததாக வந்த பென் ஃபோக்ஸ் கை கொடுத்தார்.

அதை பயன்படுத்திய ஜோ ரூட் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதமடித்து அசத்தினார். குறிப்பாக இத்தொடரின் முதல் 3 போட்டிகளில் பஸ்பால் ஆட்டத்தை விளையாடுகிறேன் என்ற பெயரில் அதிரடியாக விளையாடும் முயற்சித்து தன்னுடைய விக்கெட்டை பரிசளித்த அவர் இங்கிலாந்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதனால் உங்களுடைய இயற்கையான ஆட்டத்தை விளையாடுங்கள் என்று நிறைய முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து இப்போட்டியில் ரூட் மிகவும் நிதானமாக விளையாடினார்.

- Advertisement -

ஆனால் அவருடன் 6வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த பென் ஃபோக்ஸ் 47 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஜோ ரூட் சதமடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் சாதனை உடைத்து புதிய உலக சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. ஜோ ரூட் : 10*
2. ஸ்டீவ் ஸ்மித் : 9
3. கேரி சோபர்ஸ்/விவ் ரிச்சர்ட்ஸ்/ரிக்கி பாண்டிங் : தலா 8

அந்த வகையில் பஸ்பால் ஆட்டத்தை ஓரங்கட்டி விட்டு தன்னுடைய வழியில் ஜோ ரூட் விளையாடியதால் தப்பிய இங்கிலாந்து முதல் நாள் முடிவில் 302/7 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு களத்தில் ஜோ ரூட் 106* ரன்கள், ஓலி ராபின்சன் 31* ரன்களுடன் உள்ளனர். எனவே நாளை அந்த அணியை 350 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

Advertisement