லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அசத்தியதன் மூலம் மீண்டும் உச்சத்தை தொட்ட ஜோ ரூட் – விவரம் இதோ

Joe Root
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது போட்டியின் போது மிகப்பெரிய வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது.

மீண்டும் உச்சத்தை தொட்ட இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் :

இதன் காரணமாக இந்த தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் இருந்த வேளையில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

- Advertisement -

இதனால் இங்கிலாந்து அணி தற்போதைய நிலையில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அந்த அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் இரண்டு இன்னிங்ஸ்சிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணி சார்பாக அதிக ரன்களை குவித்தார்.

குறிப்பாக முதல் இன்னிங்சில் 199 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரியுடன் 104 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 96 பந்துகளை சந்தித்து 1 பவுண்டரியுடன் 40 ரன்களையும் குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டமே அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் மீண்டும் ஜோ ரூட் முதலிடத்தை பிடித்து உச்சம் தொட்டுள்ளார். ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் தடுமாறி வந்த அவர் தரவரிசை பட்டியலில் சற்று சறுக்களை சந்தித்திருந்தார். இவ்வேளையில் மூன்றாவது போட்டியில் மீண்டும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதையும் படிங்க : நான்காவது டெஸ்டில் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடியே ஆகவேண்டும்.. இல்லனா சிக்கல் தான் – விவரம் இதோ

இந்த பட்டியலில் அவருக்கு அடுத்து கேன் வில்லியம்சன் இரண்டாவது இடத்திலும், ஹாரி ப்ரூக் மூன்றாவது இடத்திலும், இந்திய வீரர்களான ஜெய்ஸ்வால் ஐந்தாவது இடத்திலும், ரிஷப் பண்ட் எட்டாவது இடத்திலும், சுப்மன் கில் ஒன்பதாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement