ஒரே ஓவரில் 6 சிக்ஸ் அடித்து சாதனை படைத்த நியூசி வீரர். காட்டடி ஆட்டம் – வைரல் வீடியோ

Carter

நியூசிலாந்தில் சூப்பர் ஸ்மாஷ் எனப்படும் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கிறிஸ்ட் சர்ச்சில் நடைபெற்ற ஒரு போட்டியில் காண்டர்பெர்ரி கிங்ஸ் மற்றும் நார்த்தன் நைட்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் கன்டர்புரி அணியின் இடது கை பேட்ஸ்மேனான லியோ கார்ட்டர் என்பவர் எதிர் அணி பந்து வீச்சாளர் வீசிய ஒரு ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்சர் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். மேலும் நியூசிலாந்து வீரர் ஒருவர் அடிப்பது இவரே முதல் வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

இறுதிவரை 29 பந்துகளை சந்தித்து 70 ரன்களை அடித்து 220 ரன்கள் என்ற பெரிய இலக்கை சேசிங் செய்ய அவரது இந்த அதிரடி உதவியது. இந்திய வீரர்கள் வீரரான யுவராஜ் சிங் மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ் ஆகியோர் இந்த சாதனையை சர்வதேச அளவில் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.