நியூசி மற்றும் இங்கி இறுதிப்போட்டியில் ஆடும். இவர்களுக்கே கோப்பை – ஜனவரி மாதமே கணித்த தமிழக ஜோதிடர் – வீடியோ இதோ

Nz

நடப்பு உலக கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் முடிந்த நிலையில் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் போன்ற நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

aus vs eng

இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தது. அடுத்து நேற்று நடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியதால் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எனவே ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தான் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதையும். இறுதிப்போட்டியில் யார் வெல்வார் என்றும் தமிழக ஜோதிடர் ஒருவர் துல்லியமாக கடந்த ஜனவரி மாதமே கணித்துள்ளார். இதோ அந்த வீடியோ :

இதில் நியூசிலாந்து அணிதான் கோப்பையை கைப்பற்றும் அணி என்று அந்த ஜோதிடர் கணித்துள்ளார். அரையிறுதி போட்டிகள் வரை இவரது கணிப்பு சரியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.