இந்திய ரசிகர்கள் இறுதிப்போட்டியை காண வரவில்லையென்றால் இதனை செய்யுங்கள் – ஜிம்மி நீஷம்

Neesham
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோத இருக்கின்றன.

eng vs nz

- Advertisement -

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீசம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இறுதிப்போட்டியில் விளையாட இருப்பதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளோம். சென்ற வருடம் எங்கள் அணி இறுதிப்போட்டிக்கு சென்றும் இறுதியில் தோற்றோம். இந்த முறை நாங்கள் வெற்றிக்காக நிச்சயம் பாடுபடுவோம்.

மேலும் இந்திய ரசிகர்களே உங்களிடம் எனக்கு ஒரு வேண்டுகோள் உள்ளது. ஒருவேளை நீங்கள் இறுதிப் போட்டியை காண வரவில்லை என்றால் உங்களது டிக்கெட்டுகளை நீங்கள் மற்றவர்களுக்கு விற்றுவிடுங்கள். இதனை நான் கூறும் போது உங்களுக்கு கோபம் வருவது எனக்கு புரியும் ஆனால் நான் இது எனக்கே சுயலாபத்துக்கு கூறவில்லை.

மற்ற உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை பார்க்க ஒரு வாய்ப்பாக அமையும் இந்தியா இறுதிப் போட்டியில் நுழையாததால் உங்களுக்கு இருக்கும் வருத்தம் எனக்கு புரிகிறது அதனாலேயே இதனைப் போன்று கூறுகிறேன் என்று நீசம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement