கோலி கூறிய இந்த சின்ன டிப்ஸ் தான் என்னோட பேட்டிங் ஸ்டைலையே மாத்துச்சி – மே.இ வீரர் பேட்டி

Blackwood

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜெர்மைன் ப்ளாக்வுட் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இவர் இதுவரை 30 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பல முறை தனது அணிக்காக வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

blackwood 2

இதன் மூலம் இவர் 31.10 டெஸ்ட் ஆவரேஜ் மற்றும் 5.50 ஒருநாள் ஆவரேஜ் பெற்றிருக்கிறார். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 112 ரன்கள் எடுத்ததே அதிகமாக இருக்கிறது. இவர் அதுமட்டுமின்றி இவர் 12 முறை அரைசதம் அடித்து இருக்கிறார். ஆனால் இதை சதமாக மாற்ற முடியாமல் தவித்து வந்துள்ளார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விராட் கோலியிடம் இது குறித்து பேசியிருக்கிறார் ஜெர்மைன் ப்ளாக்வுட்.

2019 ஆம் ஆண்டில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஜெர்மைன் ப்ளாக்வுட் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் உரையாடலை மேற்கொண்டிருக்கிறார். அப்போது விராட் கோலியிடம் ப்ளாக்வுட் எவ்வாறு அரைசதத்தை சதமாக மாற்றுவது என்று கேட்டிருக்கிறார். அதற்கு விராட் கோலி அதிக பந்துகளை எதிர்கொள்வதே முதல்படி என்று கூறுகிறார்.

blackwood 1

இதுகுறித்து பிளாக் கூறுகையில் “ சர்வதேச வீரர்களுடன் அதிகளவில் நான் உரையாடியது கிடையாது. ஆனால் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் சமூக வலைத்தளம் மூலம் பலமுறை உரையாடி இருக்கிறேன். இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நான் விராட் கோலியுடன் நேரில் சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் நான் எப்படி அரைசதத்தை சதமாக மாற்றுவது என்று கேட்டேன்.

- Advertisement -

அதற்கு விராட் கோலி டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை அதிக பந்துகளை எதிர் கொள்வதே முக்கியம்” என்று விராட் கோலி கூறியிருப்பதாக பிளாக்வுட் கூறுகிறார். மேலும் பேசிய பிளாக்வுட் “நான் விராட் கோலியுடன் சிறிது நேரம் தான் பேசினேன். ஆனால் அது எனக்கு மிகப் பெரிய பலன் கொடுத்தது. கோலியின் அந்த டிப்ஸை நான் இன்னும் மனதில் வைத்து விளையாடி வருகிறேன்” என்று கூறியிருக்கிறார்.