ஐ.பி.எல் வரலாற்றின் சிறந்த அணி இதுதான். இதைவிட சிறப்பான அணி தெரியல – 11 பேர்கொண்ட அணி இதோ

- Advertisement -

ஐபிஎல் தொடர் இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது .ஆயிரக்கணக்கான இந்திய வீரர்களும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு வீரர்களும் இதில் பங்கேற்று விளையாடி உள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் தொடர்பான விவாதங்களும் கருத்துக்களும் சமூகவலைதளத்தில் முன்னாள் வீரர்கள் பகிரப்பட்டு வருகிறது.

Ipl cup

- Advertisement -

இந்நிலையில் இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது ஐபிஎல் வரலாற்றில் சிறந்த அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். இவர்தான் அணியில் துவக்க வீரர்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் இருக்கின்றனர்.

மூன்றாவது வீரராக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி இடம்பிடிக்கிறார். நான்காவதாக பெங்களூரு அணியின் டிவிலியர்ஸ் ஆல்-ரவுண்டராக கொல்கத்தா அணியின் ஆன்ட்ரே ரசல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

CskvsMi

கேப்டனாக ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம் பெற்றுள்ளார். விக்கெட் கீப்பராக செயல்படுவார். மற்றொரு சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முகமது நபியை தேர்வு செய்துள்ளார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். மேலும் இடது கை சுழற்பந்து வீச்சாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

இதனைத் தாண்டி ரஷித் கான் மற்றும் சுழற்பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளரை மட்டுமே இந்த அணிகள் தேர்வு செய்துள்ளார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். அது மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆவார். இந்த ஐபிஎல் வரலாற்று அணியில் வெறும் 5 இந்திய வீரர்களும் 6 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்துள்ளார்.

bumrah

அவர் மேலும் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளர் மூன்று சுழற்பந்து வீச்சாளர் இரண்டு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என வித்தியாசமான அணியை தேர்வு செய்துள்ளார் ஜெமிமா ரோட்ரிக்ஸ்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் தேர்வு செய்த ஐபிஎல் வரலாற்று லெவன்:

ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, டிவில்லியர்ஸ், ஆண்ட்ரே ரசல், பென் ஸ்டோக்ஸ், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), முகமது நபி, ஜடேஜா, ரஷீத் கான், பும்ரா.

Advertisement