நல்லா விளையாடியும் இந்திய அணியில் நான் தேர்வாகாதது ரொம்ப கஷ்டமா இருக்கு – வேதனையை வெளிப்படுத்திய வீரர்

Unadkat
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றிற்கான இந்திய அணியில் தன்னை ஒரு பேக்கப் வீரராககூட தேர்வு செய்யாதது குறித்து, தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிறார் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர். இங்கிலாந்து செல்லவிருக்கும் இந்திய அணியானது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. ஜூன் மாதம் 18ஆம் தேதி தொடங்கி 22 தேதியுடன் முடிவடைய இருக்கும் இந்த போட்டிக்குப் பின்னர், இந்திய அணியானது இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிதான் முடிவடையும்.

- Advertisement -

இந்த தொடர்களுக்கான இந்திய டெஸ்ட் அணி கடந்த 07ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் 20 முன்னனி வீரர்கள் மட்டுமல்லாமல், அர்சான் நக்வஸ்வாலா, அபிமன்யு ஈஸ்வரன், அவேஷ் கான் மற்றும் பிரசித் கிருஷ்னா ஆகிய நான்கு பேக்கப் வீரர்களும் இடம்பிடித்திருந்தனர்.
இந்நிலையில் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் தன்னை ஒரு பேக்கப் வீரராக்கூட தேர்வு செய்யப்படாதது எனக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என்று கூறி இருக்கிறார், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த இடது கை வேகப் பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனாத்கட். இதுபற்றி அவர் கூறியதாவது,

கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின்போது இந்திய அணியில் இடம்பிடத்திருந்த அனைத்து வீரர்களும் நன்றாக விளையாடி இருந்ததால், அந்த அணிதான் சிறந்த அணியாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். அந்த தொடரில் காயத்தினால் விளையாட முடியாமல்போன பல முன்னனி வீரர்களுக்கு பதிலாக சில பேக்கப் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடினர். அதைப் பார்த்தபோது, கண்டிப்பாக நானும் அந்த அணியில் இருந்திருக்க வேண்டிய தகுதியுடைய ஒருவன் தான் என்று நினைத்தேன் என்று அவர் கூறினார். கடந்த ரஞ்சி ட்ராபி தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த ஜெய்தேவ் உனத்கட்டிற்கு, தற்போது இங்கிலாந்து செல்லும் இந்திய அணியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து பேசிய அவர்,

Unadkat 2

இங்கிலாந்து செல்ல விருக்கும் இந்திய அணியில் நான் நிச்சயமாக இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்பையில் இருந்தேன். ஏனெனில் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் பேக்கப் வீரர்களே சிறப்பாக செயல்பட்டிருந்தனர். எனவே ரஞ்சி ட்ராபியில் சிறப்பாக செயல்பட்ட என் பெயரை நிச்சயமா தேர்வுக் குழு பரீசீலணை செய்யும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இந்திய அணியில் என்னை ஒரு பேக்கப் வீரராக்கூட தேர்வு செய்வில்லை. இந்திய தேர்வுக் குழுவின் இந்த செயல்பாடு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்திருக்கிறது என்றாலும், அது எனக்கு மன அழுத்தத்தை தரவில்லை என்று அவர் கூறினார்.

unadkat

29 வயதான உனத்கட், 2010ஆம் ஆண்டே தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமாகிவிட்டார். அந்த போட்டியில் மிக மோசமாக செயல்பட்ட அவர், அந்த போட்டியில் 26 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றாமல் 156 ரன்கள் விட்டுக் கொடுத்ததால், உடனடியாக இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்குப் பிறகு ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்த அவர், தனது சீரற்ற பந்து வீசும் தன்மையின் காரணமாக முழுவதுமாக இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement