என்னோட மொத்த கேரியரும் இந்த ஆட்டோகிராஃப்ல இருக்கு – 12 வருட பொக்கிஷத்தை பகிர்ந்த ஜெயதேவ் உனட்கட்

Jaydev-Unadkat
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல கடைசி சோதனையாக சொந்த மண்ணில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அத்தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் 12 வருடங்கள் கழித்து போராடி வாய்ப்பு பெற்ற ஜெயதேவ் உனட்கட் மீண்டும் வாய்ப்பு பெறுவாரா என்ற ஆதங்கம் ரசிகர்களிடம் காணப்படுகிறது.

ஏனெனில் இந்தியாவுக்காக கடந்த 2010ஆம் ஆண்டு செஞ்சூரியனில் நடைபெற்ற டெஸ்ட் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அறிமுகமான அவர் விக்கெட்டுகள் எதுவும் எடுக்கவில்லை. துரதிஷ்டவசமாக அப்போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்ததால் எஞ்சிய தொடரில் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட அவருக்கு விதியைப் போல் அதற்கடுத்த தொடர்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் 2013 – 2018 வரையிலான காலகட்டத்தில் கணிசமாக பெற்ற ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் சுமாராக செயல்பட்ட அவர் சமீப காலங்களில் ஐபிஎல் தொடரிலும் எதிர்பார்த்த அளவுக்கு அசத்தவில்லை.

- Advertisement -

ஆட்டோகிராம் கேரியர்:
அதனால் அவருடைய இந்திய கேரியர் முடிந்து விட்டதாக அனைவரும் நினைத்தாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து போராடிய ஜெயதேவ் உனட்கட் 2019 ரஞ்சிக்கோப்பையில் அதிக விக்கெட்கள் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்து கேப்டனாக சௌராஷ்ட்ராவுக்கு முதல் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தார். அத்துடன் 2022 விஜய் ஹசாரே கோப்பையையும் வென்று சாதனை படைத்து தொடர்ந்து உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் அசத்தி வந்ததால் தாமாக முன்வந்து தேர்வுக்குழு தேர்வு செய்தது.

அதனால் 19 வயதில் முதல் போட்டியில் விளையாடி 31 வயதில் 2வது போட்டியை விளையாடிய அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டிக்கும் 2வது போட்டிக்கும் இடையே அதிக போட்டிகளை தவற விட்ட வீரர் என்ற பெயரை வாங்கினார். அந்தளவுக்கு போராடி சரித்திர கம்பேக் கொடுத்த அவர் 12 வருடங்கள் கழித்து தன்னுடைய முதல் டெஸ்ட் விக்கெட்டை எடுத்து கனவை நிஜமாக்கினார்.

- Advertisement -

அந்த வகையில் நம்பிக்கையுடன் கடினமாக உழைத்துப் போராடினால் நிச்சயம் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக மாறியுள்ள அவர் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடுவோமா என்ற சந்தேகத்தால் வங்கதேசத்துக்கு எதிரான 2வது போட்டிக்கு பின் அனைத்து இந்திய வீரர்களின் ஆட்டோகிராபை தன்னுடைய ஜெர்சியில் பரிசாக வாங்கியுள்ளார்.

இந்நிலையில் 2010ஆம் ஆண்டு தன்னுடைய முதல் போட்டியில் விளையாடிய போதும் இதே போல் சச்சின் டெண்டுல்கர், முதல் தோனி வரை அனைத்து இந்திய வீரர்கள் ஆட்டோகிராப் போட்ட முதல் ஜெர்ஸியையும் 2வது போட்டியில் ஆட்டோகிராப் வாங்கிய ஜெர்சியையும் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஜெயதேவ் உனட்கட் “அந்த இடைப்பட்ட வருடங்களுக்கு இடையேயான பயணம்” என்று தம்மை தாமே தன்னம்பிக்கையுடன் பாராட்டி தன்னுடைய 267 ஜெர்சி நம்பரை குறிப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

அவர் விளையாடிய முதல் போட்டியில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 50வது டெஸ்ட் சதத்தை அடித்து உலக சாதனை படைத்தும் இந்தியா தோல்வியை சந்தித்தார். இருப்பினும் எம்எஸ் தோனி, வீரேந்திர சேவாக், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்ஷ்மன், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங், கௌதம் கம்பீர், ஸ்ரீசாந்த், இஷாந்த் சர்மா, புஜாரா, சுரேஷ் ரெய்னா, பிரக்யான் பூஜா முரளி விஜய், உமேஷ் யாதவ், ரித்திமான் சஹா ஆகியோரது கையொப்பங்களை நினைவு பரிசாக வாங்கிய அவர் கிருஷ்ணன் மற்றும் சிமன்ஸ் ஆகிய பயிற்சியாளர்களின் கையொப்பங்களையும் வாங்கிய ஜெர்ஸியை இன்னும் பத்திரமாக வைத்துள்ளார்.

இதையும் படிங்க: பெயரையும் நட்சத்திர அந்தஸ்தையும் பாக்காம அங்க அனுப்பி விடுங்க – சொதப்பல் கேப்டன்களை விளாசிய ரீதிண்டர் சோதி

மொத்தத்தில் வெறும் 2 போட்டியில் 12 வருட சரித்திரத்தை கொண்ட தன்னுடைய கேரியர் இத்துடன் முடிந்து விடக்கூடாது என்பதே அவருடைய நம்பிக்கையாகவும் இந்திய ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.

Advertisement