- Advertisement -
உலக கிரிக்கெட்

15.5 ஓவரில் 10 மெய்டன்.. 0.30 எக்கனாமி.. வங்கதேசத்தை மிரட்டிய வெ.இ பவுலர்.. அபாரமான உலக சாதனை

வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்ற நிலையில் இரண்டாவது போட்டி கிங்ஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 30ம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.

அதை அடுத்து களமிறங்கிய வங்கதேசம் மிகவும் தடுமாற்றமாக விளையாடி 71.5 ஓவரில் வெறும் 164 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சாத்மன் இஸ்லாம் 64, கேப்டன் மெஹதி ஹசன் 36 ரன்கள் எடுத்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக ஜெய்டேன் சீல்ஸ் 4, சமர் ஜோசப் 3, கெமர் ரோச் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

- Advertisement -

ஜெய்டேன் சீல்ஸ் மிரட்டல்:

குறிப்பாக ஜெய்டேன் சீல்ஸ் ஆரம்பம் முதலே மிகவும் துல்லியமாக பந்து வீசி வங்கதேச பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்டார். அவருக்கு எதிராக ரன்கள் அடிக்க முடியாமல் வங்கதேச பேட்ஸ்மேன்கள் திண்டாடினார்கள். அந்த வகையில் 15.5 ஓவரில் ஜெய்டேன் சீல்ஸ் 10 மெய்டன் வீசி வெறும் 5 ரன்களை 0.30 என்ற எக்கனாமியில் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார்.

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது சிறந்த எக்கனாமியை (0.30) பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல் (குறைந்தது 90 பந்துகள்):
1. பாபு நட்கர்னி (இந்தியா): 0.15, இங்கிலாந்துக்கு எதிராக, சென்னை, 1963 – 64
2. ஜெய்டேன் சீல்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்): 0.30, வங்கதேசத்துக்கு எதிராக, கிங்ஸ்டன், 2024 – 25
3. ஜிம் லேகர் (இங்கிலாந்து): 0.37, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, கேப் டவுன், 1956 – 57

- Advertisement -

அதிரடி சாதனை:

அத்துடன் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை எடுத்த வீரர்களில் குறைந்த எக்னாமியை (0.30) பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனையையும் ஜெய்டேன் சீல்ஸ் படைத்துள்ளார். இதற்கு முன் 1965ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தானின் 12 ஓவரில் 5 ரன்களை 0.41 என்ற எக்கனாமியில் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: பெருசா ஒன்னுமில்ல.. இதை செஞ்சு 2வது டெஸ்டில் பும்ராவையும் இந்தியாவையும் வீழ்த்த ரெடி.. டிராவிஸ் ஹெட்

அதை அடுத்த களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது நாள் முடிவில் 70-1 ரன்கள் குவித்துள்ளது. மைக் லூயிஸ் 12 ரன்களில் அவுட்டானார். இன்னும் 94 ரன்கள் பின்தங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு களத்தில் கேப்டன் ப்ரத்வெய்ட் 33*, கேசி கார்ட்டி 19* ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்கள். அந்த வகையில் இந்த போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது.

- Advertisement -