ஐ.பி.எல் தொடரில் விளையாட அவங்களிடம் நல்ல பிளேயர்ஸ் இல்லை – உண்மையை ஓப்பனாக கூறிய ஜெயவர்த்தனே

Jayawardene
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கி இன்று வரை நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தாண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான ஏலம் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்துள்ளது.அதில் பங்கெடுத்த அணிகள் தங்கள் கை வசம் இருந்த இருப்பு தொகையை கொண்டு அதற்கேற்ப வீரர்களை வாங்கினர்.

ipl trophy

இந்த ஏலத்தில் பெரும்பாலும் அணிகள் பாஸ்ட் பவுலர்களையே குறி வைத்தது. பாஸ்ட் பவுலர்களே அதிக தொகைக்கு ஏலம் போகினர்.கிறிஸ் மோரிஸை ராஜஸ்தான் அணி 16.25 கோடிக்கு வாங்கியது. கைல் ஜேமிசனை பெங்களூரு 15 கோடிக்கு வாங்கியது. ஜய் ரிச்சர்ட்சனை 14 கோடிக்கும் ரிலே மெரடித்தை 8 கோடிக்கும் பஞ்சாப் வாங்கியது.குல்டர்நைலை 5 கோடிக்கும் மிலினேவை 3.2 கோடிக்கும் மும்பை வாங்கியது.

- Advertisement -

இப்படி வெவ்வேறு வெளிநாட்டு வீரர்கள் பெரும் தொகைக்கும் ஏலம் போன பொழுதில் ஸ்ரீ லங்காவில் இருந்து ஒரு வீரர் கூட ஏலம் போகவில்லை.இது ரசிகர்களிடையே பெரிய கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த கேள்வி குறித்து பதில் சொன்ன சங்கக்காரா , ” இலங்கை கிரிக்கெட் வாரியம் எப்போது வேண்டுமானாலும் வெளியூர் தொடருக்கு வீரர்களை அழைக்கும். அப்படி அழைக்கும் வேளையில் இலங்கை வீரர்களால் ஐபிஎல் தொடரில் முழுமையாக பங்கெடுக்க முடியாது.இதுவே காரணம் என்று பதிலளித்துள்ளார்.

இவர் இப்படி பதிலலிக்க மறுபுறம் ஜெயவர்தனே எங்கள் நாட்டு வீரர்கள் சமீப காலமாக அவ்வளவு சரியாக ஆடக்கூட வகையில் இல்லை.மேலும் மொத்த ஏலத்தையும் சேர்த்தே 20 வெளிநாட்டு வீர்களே தேவைப்பட்ட நிலையில் நல்ல வீரர்களை அந்தந்த அணிகள் தேர்வு செய்து விட்டன.இதுவே இலங்கை வீரர்கள் ஏலம் போகாக் காரணம் என்று பதிலளித்துள்ளார்.

udana

ஜெயவர்த்தனே கூறியபடி இலங்கை அணியில் சொல்லிக்கொள்ளும்படி அதிரடி வீரர்களோ அல்லது சிறப்பான பவுலர்களோ இல்லை என்பதே உண்மை.

Advertisement