இவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் ரோஹித் கேப்டன் ஆவதை யாராலும் தடுக்க முடியாது

Rohith-1
- Advertisement -

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியின் பதவி உலகக் கோப்பையுடன் முடிந்தது. இந்நிலையில் மேலும் 45 நாட்கள் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்காக அவருடைய பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Ravi

இந்நிலையில் புதிய பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ தற்போது தகவலை அறிவித்தது. அதன்படி பலரும் இந்திய அணியின் பயிற்சியாளராக விண்ணப்பித்து வருவதாக தெரிகிறது. அதிலும் முக்கியமாக இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹேலா ஜெயவர்த்தனா விண்ணப்பிக்க உள்ளதாக சில செய்திகள் கசிந்துள்ளன.

- Advertisement -

ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தாலும் அவர் நியமிக்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. எனவே புதிய பயிற்சியாளராக மஹேல ஜெயவர்த்தனா ஒருவேளை நியமிக்கப்பட்டால் கண்டிப்பாக ரோகித் சர்மா ஒருநாள் அணிக்கு கேப்டனாக ஆவதில் மாற்றம் எதுவும் இல்லை. ஏனெனில் மும்பை அணிக்கு கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா மற்றும் அந்த அணியின் பயிற்சியாளராக மஹேலா ஜெயவர்த்தனே இருக்கிறார்கள்.

Rohith

இவர்கள் இருவரது கூட்டணியில் இரண்டு முறை மும்பை அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே ஒருவேளை ஜெயவர்தனே பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிச்சயம் கோலி டெஸ்ட் அணிக்கும், ரோஹித்தை ஒரு நாள் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவது உறுதி என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Advertisement