வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள மாற்று வீரர் – யார் தெரியுமா?

Sundar-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் அங்கு நடைபெற உள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தேர்வாகியிருந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக தற்போது இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் விளையாடும் வாய்ப்பை வாஷிங்டன் சுந்தர் தவற விட்டுள்ளார். இதன் காரணமாக அவரது இடத்திற்கு மாற்று வீரருக்கான தேர்வு நடைபெற்றது. தற்போது அதன் முடிவை அறிவித்த இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஆன பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

அதன்படி வாஷிங்டன் சுந்தர்-க்கு பதிலாக தற்போது டெஸ்ட் தொடருக்கான அணியில் இருக்கும் ஜெயந்த் யாதவ்-வை ஒருநாள் தொடரிலும் இணைத்துள்ளது. அதேபோன்று கூடுதல் வீரராக முகமது சிராஜ்-க்கு பேக்கப் வீரராக நவ்தீப் சைனியும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது 19ஆம் தேதி துவங்குகிறது.

இந்த அணியை கேஎல் ராகுல் வழி நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இதோ

- Advertisement -

இதையும் படிங்க : ஆஹா இந்தியா – பாகிஸ்தான் உட்பட 4 அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர். பாகிஸ்தானின் புதிய ஐடியா – முழு விவரம் இதோ

கே.எல்.ராகுல் (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சாஹல், அஷ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், சிராஜ், ஜெயந்த் யாதவ், நவ்தீப் சைனி.

Advertisement