- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் டிராவிட் விண்ணப்பிக்காதது ஏன்? – ஜெய் ஷா கொடுத்த விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானான ராகுல் டிராவிட் கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றார். அதனை தொடர்ந்து கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே அவரது பயிற்சியின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்திய அணியானது பல்வேறு வெற்றிகளை பெற்றிருந்தாலும் ஐசிசி கோப்பையை மட்டும் கைப்பற்ற முடியவில்லை என்கிற குறை நீடித்து வந்தது.

ஆனால் தற்போது நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றியதின் மூலம் அந்த குறையும் தீர்ந்தது. இந்நிலையில் ராகுல் டிராவிட் ஏற்கனவே அறிவித்தபடி இந்த டி20 உலக கோப்பை தொடருடன் தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

- Advertisement -

மேலும் தான் தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டதால் அவருக்கு பதிலாக தற்போது புதிய பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பு ஏற்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு டிராவிட் ஏன் மீண்டும் விண்ணப்பிக்கவில்லை? என்கிற காரணத்தை பி.சி.சி.ஐ-யின் செயலாளர் ஜெய் ஷா வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ராகுல் டிராவிட் குடும்ப கடமைகள் காரணமாக இந்த பதவியில் இருந்து விலக விரும்புவதாக தெரிவித்தார்.

- Advertisement -

அவரது முடிவை நாங்கள் மதிக்கிறோம். மேலும் அவரை வற்புறுத்த நாங்கள் விரும்பவில்லை. ராகுல் பாய் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்க்காக மிகச் சிறப்பாக சேவை செய்துள்ளார். ஏற்கனவே மூன்று ஆண்டுகள் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு இயக்குனராக இருந்த அவர் இரண்டரை ஆண்டுகளாக இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

இதையும் படிங்க :

இந்த டி20 உலக கோப்பையை வெல்ல ரோஹித் சர்மா எவ்வளவு பெரிய முக்கிய காரணமோ அதேபோன்று டிராவிட்க்கும் இந்த கோப்பையை வெல்ல ஒரு முக்கிய பங்கு உண்டு. கடந்த ஆண்டு 50 ஓவர் உலககோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிவரை அவர் அழைத்துச் சென்றும் தோல்வியை சந்தித்ததால் அவர் டி20 உலககோப்பையை வெல்ல விரும்பினார் என ஜெய் ஷா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -