இந்தியாவில் துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி துவங்க உள்ளது. அந்தத் தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ஆகியோர் விளையாடுவார்கள் என்று ஆரம்பத்தில் செய்திகள் வெளியானது. ஏனெனில் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கெளதம் கம்பீர் ஃபிட்டாக இருக்கும் அனைவரும் கட்டாயம் விளையாட வேண்டும் என்ற கோட்பாட்டை கொண்டு வந்துள்ளார்.
குறிப்பாக தனித்துவமான பவுலராக பும்ராவை தவிர்த்து மற்ற அனைவரும் விளையாட வேண்டும் என்று கம்பீர் கண்டிப்புடன் தெரிவித்தார். அதனாலேயே சமீபத்திய இலங்கை ஒருநாள் தொடரில் ஆரம்பத்தில் ஓய்வெடுக்க முடிவு எடுத்திருந்த அவர்களை கம்பீர் வலுக்கட்டாயமாக விளையாட வைத்தார். அதனால் துலீப் கோப்பையில் 14 வருடங்கள் கழித்து விராட் கோலியும் 8 வருடங்கள் கழித்து ரோஹித் சர்மாவும் விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஜெய் ஷா விளக்கம்:
ஆனால் கடைசி நேரத்தில் மிகப்பெரிய அனுபவம் கொண்ட விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு பிசிசிஐ ஓய்வு கொடுத்தது. அதே சமயம் கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, சிராஜ் உள்ளிட்ட மற்ற அனைத்து சீனியர் வீரர்களும் துலீப் கோப்பையில் விளையாட உள்ளனர். மேலும் ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் தலைமையில் ஜெய்ஸ்வால் உள்ளிட்ட இளம் வீரர்களும் விளையாட உள்ளனர்.
இந்நிலையில் அடுத்ததாக வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா முக்கியமான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. எனவே அதற்கு முன் கௌதம் கம்பீர் பரிந்துரையைத் தாண்டி விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் காயத்தை சந்தித்து விடக்கூடாது என்ற எண்ணத்துடன் துலீப் கோப்பையில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக ஜெய் ஷா கூறியுள்ளார்.
மேலும் அனுபவம் மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக ஜெய் ஷா கூறியுள்ளார். பிசிசிஐ செயலாளரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவர்களைத் தவிர்த்து அனைவரும் விளையாடுகின்றனர். அதை நீங்கள் பாராட்ட வேண்டும். ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிசான் புஜ்ஜி பாபு தொடரில் விளையாடுகின்றனர்”
இதையும் படிங்க: இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக வேண்டிய பாலாஜி.. முக்கிய நேரத்தில் தடுத்த கம்பீர்.. வெளியான தகவல்
“நாம் விராட் மற்றும் ரோஹித் ஆகியோரை துலீப் கோப்பையில் விளையாடுமாறு சொல்ல முடியாது. அதனால் அவர்கள் காயமடையும் ரிஸ்கை சந்திக்கலாம். ஆஸ்திரேலியா இங்கிலாந்து, போன்ற வெளிநாடுகளில் அனைத்து சர்வதேச வீரர்களும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. எனவே நாங்களும் வீரர்களை மரியாதையுடன் நடத்த விரும்புகிறோம்” என்று கூறினார்.



