- Advertisement -
ஐ.பி.எல்

ஐபிஎல் 2025 : ரோஹித்தின் கோரிக்கையை ஏற்று இம்பேக்ட் பிளேயர்.. மெகா ஏலம் நீக்கப்படுமா? ஜெய் ஷா பதில்

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தயாராகி வருகிறது. அதற்கு முன்பாக சமீபத்தில் மும்பையில் ஐபிஎல் அணி நிர்வாகங்களின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக அதிகபட்சமாக 4 வீரர்களுக்கு பதிலாக 7 – 8 வீரர்களை தக்க வைக்க அனுமதியளிக்குமாறு பிசிசிஐயிடம் பெரும்பாலான அணி நிர்வாகங்கள் கோரிக்கை வைத்தன.

அத்துடன் மெகா ஏலம் 3 – 5 வருடத்திற்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அதனால் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கும் அணி கலைந்து போகும் சூழல் ஏற்படுகிறது. எனவே மெகா ஏலத்தை மொத்தமாக நிறுத்தி விட்டு மினி ஏலம் மட்டும் நடைபெற வேண்டும் என்று சென்னை, மும்பை அணிகள் கோரிக்கை வைத்தன. ஆனால் அதற்கு பெங்களூரு, டெல்லி போன்ற அணிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

- Advertisement -

ஜெய் ஷா பதில்:
அத்துடன் இம்பேக்ட் வீரர் விதிமுறையால் சிவம் துபே போன்ற ஆல் ரவுண்டர்கள் வளர்வதில் பிரச்சனை ஏற்படுவதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். அத்துடன் விராட் கோலி முதல் டேவிட் மில்லர் வரை பலரும் இம்பேக்ட் வீரர் விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அதை அடுத்த வருடம் நீக்க வேண்டும் என்று டெல்லி போன்ற சில அணி நிர்வாகங்கள் கோரிக்கை வைத்தன.

இந்நிலையில் இம்பேக்ட் வீரர் விதிமுறை நீக்கப்படுமா? மெகா ஏலம் நிறுத்தப்படுமா? என்ற கேள்விகளுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதில் அளித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சமீபத்திய மீட்டிங்கில் நாங்கள் அணி நிர்வாங்களுடன் நீண்ட நேரம் விவாதித்தோம். இம்பேக்ட் வீரர் விதிமுறையில் சாதகங்களும் பாதகங்களும் உள்ளன”

- Advertisement -

“ஆல் ரவுண்டர்களின் பங்கு குறைவது அதனுடைய பாதகமாக இருக்கிறது. ஒரு எக்ஸ்ட்ரா இந்திய வீரர் வாய்ப்பு பெறுவது அதனுடைய சாதகமாக இருக்கிறது. இந்த நேரத்தில் நிறைய பணத்தை முதலீடு செய்யும் ஒளிபரப்பாளர்களையும் நாங்கள் சிந்திக்க வேண்டும். ஆனால் ஒரு நிர்வாகியாக எனக்கு விளையாட்டு பெரியது. அதைப் பற்றி ஓரிரு நாட்களில் முடிவு செய்வோம். அதே போல மெகா ஏலம் பற்றி அனைவரிடமும் கருத்து கேட்டுள்ளோம்”

இதையும் படிங்க: ஹைப் பண்ணாதீங்க.. பார்டர் – கவாஸ்கர் கோப்பையை விட அந்த ஜாவ்லின், கபடி மேட்ச் தான் பெருசு.. பசித் அலி

“அதனுடைய இறுதி முடிவு எங்களிடம் உள்ளது. நன்கு செட்டிலாகிய அணிகள் மெகா ஏலத்தை விரும்பவில்லை. செட்டிலாகாத அணிகள் மெகா ஏலத்தை விரும்புகின்றன. இருப்பினும் ஒரு ரசிகனாக நிலைத்தன்மை முக்கியமானது என்று நினைக்கிறேன். ஆனால் அதை அவ்வப்போது மாற்றுவது விளையாட்டை சுவாரசியமாக்கி வளர்க்க உதவுகிறது” என்று கூறினார்.

- Advertisement -